குமரன்

பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17,750 கோடி நிதி

நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17 ஆயிரத்து 750 கோடி நிதி வழங்குகிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கெகியான் உள்ளிட்டவர்களை சந்தித்தார். அப்போது இவ்விரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து ...

Read More »

என்னை காயப்படுத்துகிறார்கள் – ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், அவர் அளித்த பேட்டியில், விளம்பரம் தேட நானே என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக சிலர் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் அந்தரங்க படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பானது. வாய்ப்புகள் இல்லாததால் ஹன்சிகாவே பரபரப்புக்காக படங்களை கசியவிட்டதாக வதந்தி கிளம்பியது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் செல்போனில் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு தான் ...

Read More »

மாணவர்களின் சுதந்திரதின எதிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு!

சிறிலங்காவின் சுதந்திரதினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த போதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன  ...

Read More »

ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்?

உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர். இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது மாறியிருந்தது. ஆனால் இப்போது, பஸ்ஃபீட், ஹஃபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் பல, ...

Read More »

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா!

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். பதவியை ராஜினாமா செய்தது ...

Read More »

டிரம்ப் – கிம் வியட்நாமில் சந்திக்க திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி  உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ...

Read More »

இலங்கையைச் சுற்றி சக்கர நாற்காலியில் பயணம்!

வவுனியாவைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட முகமட் அலி என்பவர் இன நல்லிணக்கத்தையும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை வலியுறுத்தியும், சக்கர நாற்காலியில் சுற்றிவரும் இலங்கையைப்  பயணத்தை இன்று (02.02) வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்தார். வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள்  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியிருந்தனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் சம்பிரதாயபூர்வமாக  முகமட் அலியின் நல்லிணக்க பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்தார். முகமட் அலி இலங்கை மின்சாரசபையில் பணியாற்றியபோது ஏற்பட்ட ...

Read More »

18 பேர் கொல்லப்பட்ட மோசூல் வான் தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியா!

கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக் மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது வான் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அந்த கால கட்டத்தில் மோசூல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த நகரை மீட்பதற்காக அமெரிகாவின் தலைமையிலான சர்வதேச படையணியினர் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், தமது படையணியின் வான் தாக்குதல் காரணமாகத்தான் இந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை உறுதியாக கூறமுடியாது என அவுஸ்திரேலிய வான் ...

Read More »

பொன்னியின் செல்வனை இணைய தொடராக்கும் சௌவுந்தர்யா!

சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை தமிழில் இணைய தொடராக்கும் முயற்சியில் சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இறங்கியிருக்கிறார். எழுத்தாளர் கல்கியின் அமர காவியமான `பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கவும் அதில் வந்தியத்தேவனாக நடிக்கவும் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலரும் விரும்பினார்கள். ஆனால் நிறைவேறவில்லை. இப்போது தான் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்க ஆரம்ப கட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் சௌவுந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி ஒரு சரித்திர வலைத்தொடரை தயாரிக்க உள்ளார். ...

Read More »

அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கன்பரா மைதானத்தில் இடம் பெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Read More »