ஆஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜுலி பிஷப், வெளியுறவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது ...
Read More »குமரன்
கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா!
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் ...
Read More »இன்டெல்லின் புதிய சாதனை, ‘சில்லு’!
உலகிலேயே மிக அடர்த்தியான, எஸ்.எஸ்.டி எனப்படும், ‘சாலிட் ஸ்டேட் டிரைவ்’ ஒன்றை இன்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய அளவுள்ள இந்த டிரைவ், 32 டெரா பைட் அளவு தகவல் கொள்திறன் கொண்டது. பெரும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வைக்கும், ‘டேட்டா சென்டர்’கள் முதல் இணையத்திற்கு பாலமாக இருக்கும் பிரமாண்ட, ‘சர்வர்கள்’ வரை அடியோடு மாறப்போகின்றன. இந்த மையங்களில், சர்வர்கள் ஏராளமான இடத்தை அடைத்தபடி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சி, அதிக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருப்பவை. இந்த வெப்பத்தை தணிக்கவே நிறைய செலவு செய்யவேண்டும். இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் ...
Read More »அன்பின் பேருரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!
இந்திய சுதந்திர தேவியின் சிலையை எத்தனையோ சிற்பிகள் வடித்தனர். அந்தச் சிலையின் கண்களைத் திறந்தவர் நேதாஜி. இந்தியா எப்படி விடுதலைப் பெறவேண்டும் என்ற தீர்க் கமானப் பார்வையுடன் தன் ஐசிஎஸ் பதவியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்துக்குள் குதித்தார். “வாள் கொண்டு போரிடுபவனுக்கு வாள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும், ரத்தம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்” என்ற முழக்கத்துடன் ஆயுதப் புரட்சியைத் தேர்ந்தெடுத்தார். அரண்மனைப் போன்ற வீடும், வீடு நிறைய வேலையாட் களும் பாரம்பரிய செல்வாக்கும் நிரம்பிய காங்கிரஸ் வழக்கறிஞர் ஜானகிநாத் – பிரபாவதி தம்பதியின் 14 ...
Read More »இந்திய அணி நவம்பரில் ஆஸ்திரேலியா பயணம்
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. ஜனவரி மாதம் வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 21-ந் திகதி போட்டிகள் தொடங்குகிறது. ஜனவரி 18-ந் திகதியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிகிறது. 20 ஓவர் போட்டிகள் முதலில் நடக்கிறது. நவம்பர் ...
Read More »பாலஸ்தீனத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது! – அமெரிக்கா
பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிகழாண்டு பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. அப்பகுதிகளில் ஹமாஸ் ...
Read More »முன்னாள் கடற்படை தளபதி கைது செய்ய காத்திருக்கும் குற்றப் புலனாய்வு!
சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமானால், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரண்னாகொடவையும், தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவையும் கைது செய்ய சி.ஐ.டி. தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ...
Read More »பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் காலமானார்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார். இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லீம் மக்களுக்கு ...
Read More »விலங்குகளை கண்காணிக்க விண்ணில் ஒரு கண்!
பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், கடந்த வாரம் ஒரு சிறப்பு ஆன்டனாவை, ரஷ்ய விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர். இந்த ஆன்டனா, பூமியிலுள்ள பறவைகள், விலங்குகளின் இடப்பெயர்ச்சி முதல் இனப் பெருக்கம் வரை கண்காணிக்க உதவும் என, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘ஐகாரஸ்’ எனப்படும், விண்ணில் இருந்து விலங்குகளை ஆராய உதவும் சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், தற்போது அந்த ஆன்டனாவை பயன்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர். இதற்கென, அதி நவீன ஐகாரஸ், ‘டிரான்ஸ்மிட்டர்’ கருவிகளை ...
Read More »எவ்வாறு அமையப்போகிறது வடமாகாணசபை தேர்தல்?
வடக்கு மாகாண சபை, தனது ஆயுள் முடிவடைவதற்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்தவருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இத்தகையதொரு பின்னணியில், வடக்கு மாகாண சபைக்காக நடைபெறப்போகும் புதிய தேர்தலை பெரும்பான்மைக் கட்சிகள் இலக்கு வைத்து அதற்கேற்ப காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. தென்னிலங்கைக் கட்சிகளின் வடக்கு நோக்கிய வருகை கூட்டு அரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா ...
Read More »
Eelamurasu Australia Online News Portal