குமரன்

அஜித் தான் கதையின் வில்லன்!

சிவா – அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார். விஸ்வாசம் படம் மூலம் அஜித்துடன் 4-வது முறையாக இணைந்துள்ள சிவா அளித்த பேட்டி: டிரெய்லரில் அஜித் தன்னை வில்லன் என்று சொல்கிறாரே? ஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது ...

Read More »

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதற்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வந்த மர்ம பொதியால் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உள்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பொதியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின்  தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு  தூதரகம், துணை தூதரகங்களுக்கு இன்று வந்த  மர்ம பார்சலால் பரபரப்பு  ஏற்பட்டது.  தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பொதியால் அனுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள்  ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஏ.சி-யில் ஒளிந்திருந்த பாம்பு !

கொடிய விஷமுள்ள பாம்பு ஏ.சி-யில் ஒளிந்திருந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போனை சேர்ந்த டேனி மேரோக் என்பவர் தனது மனைவி டெனிஸ் உடன் தனது வீட்டுப் படுக்கையறையில் இருந்தார். அப்போது அங்கிருந்த ஏ.சி-யின் பின்புறம் சிறிய வால் ஒன்றினைக் கண்டுள்ளார்கள். அது ஒருவேளை எலியின் வாலாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியுள்ளனர். பின்பு அதன் அருகில் சென்று பார்த்த போது அவுஸ்திரேலியாவில் உள்ள கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றான tiger snake வகை பாம்பு எனத் தெரியவந்துள்ளது இதையடுத்து பதறிபோன தம்பதி பாம்பு பிடிப்பதில் ...

Read More »

உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா!

உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனவரி மாத இறுதியுடன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கிம் அறிவித்துள்ளார். உலக வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு இந்தப் பொறுப்புக்கு வந்த ஜிம்மின் பதவிக் காலம் 2016-ம்  ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து, 2-வது முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் ஜிம் யாங் கிம் முன்னிறுத்தப்பட்டார்.  அப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், இரண்டாவது முறையாக  அவரே தேர்வு செய்யப்பட்டார். 2022-ம் ஆண்டு  ...

Read More »

காட்சியறை அரசியல்? நிலாந்தன்

1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண ...

Read More »

மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்!

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ...

Read More »

மதிப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு!

கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் கிருஸ்ண  ஆலய வீதியில் கம்பொரலிய திட்டத்தின் கீழ்  வீதி புனரமைப்பு பணிகளுக்காக   மதீப்பீடு செய்யப்பட்ட இடத்தை விடுத்து வேறு இடத்தில் புனரமைப்பு பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது என்று பொது  மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இரத்தினபுரம் கிராமத்தில் உள்ள கிருஸ்ணர் ஆலய வீதி மிகவும் மோசமானதாக காணப்படுகிறது. இதுவரை காலமும் குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை, இந்த நிலையில்  அரசின் கம்பொரலிய திட்டத்தின் கீழ் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு புனரமைப்புக்கு ஒப்பந்தகாரர்களிடம் வழங்க்கப்பட்டது. ஒப்பந்தம் வழங்க முன் குறித்த ...

Read More »

வடக்கில் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு!

வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு  வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 7ஆயிரத்து 892 குழந்தைகள் பிறந்துள்ளன. 2017ஆம் ஆண்டு 8ஆயிரத்து 152 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 572 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு 2 ஆயிரத்து ...

Read More »

பிரான்சில் மீண்டும் வலுப்பெற்றது மஞ்சள் அங்கி போராட்டம்!

பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பொது மக்களும் கைகோர்த்ததால் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து தொடங்கிய போராட்டம், அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியதால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். கார் டிரைவர்கள் அணியும் மஞ்சள் ...

Read More »