சிவா – அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார்.
விஸ்வாசம் படம் மூலம் அஜித்துடன் 4-வது முறையாக இணைந்துள்ள சிவா அளித்த பேட்டி:
டிரெய்லரில் அஜித் தன்னை வில்லன் என்று சொல்கிறாரே?
ஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டும். இந்த கேள்விக்கான பதிலை கதை கொடுக்கும். படத்தில் இருக்கும் முக்கிய திருப்பம் அது.
இந்த கதையை கேட்டு பிடித்த பிறகே அவர் சம்மதித்தார். படம் முழுக்க அவர் இருப்பார். படத்தில் கதையை சொல்வதே அவர் கதாபாத்திரம் தான்.

கமர்சியல் படம் இயக்குவதில் இருக்கும் சிரமம் என்ன?
எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டி இருப்பது தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வருவார்கள். அவர்களை ஒரே மாதிரி திருப்திபடுத்த வேண்டும்.
பேட்ட பட டிரெய்லருக்கு பதிலாக டிரெய்லர் அமைந்தது பற்றி?
நாங்கள் அந்த வசனம் பேசும் காட்சியை எப்போதோ படம் பிடித்துவிட்டோம். டிரெய்லரையும் முன்பே தயாரித்துவிட்டோம். நான் சமூகவலைதளங்களில் இல்லை. என் நண்பர்கள் இதுபற்றி சொன்னார்கள்.
Eelamurasu Australia Online News Portal