குமரன்

கோடி அற்­புதர் அந்­தோ­னி­யாரின் கோலாகலமற்ற திரு­விழா!

இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10  மணி­க்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்­கப்­ப­டும்  ஜூன் மாதம் 13ஆம் திகதி என்­றாலே கொழும்பு கொச்­சிக்­க­டைவாழ்  மக்­களின் மனதில் குதூ­கலம் குடி­கொண்டு விடும். ஆம், அன்­றுதான் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யா­ருக்குத் திரு­விழா எடுக்கும் நாள்; கோலா­கலம் நிறைந்த நாள். கொச்­சிக்­க­டைவாழ் மக்கள் மட்­டும்­தானா…? இல்லை… நாடு முழு­வ­து­முள்ள புனி­தரின் பக்­தர்கள் ஆல­யத்­துக்கு ஓர­ணி­யாகத் திரண்­டு­வந்து கொண்­டாடும்  திரு­விழா இது. புனித அந்­தோ­னியார்…!  அவரை நினைத்­தாலே போதும், மனதில் கவ­லைகள், துன்­ப­து­ய­ரங்கள், கஷ்­ட­நஷ்­டங்கள்  எல்­லாமே சூரி­யனைக் ...

Read More »

12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை !

வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி  குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், புத்­தளம், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை, மாத்­தளை மற்றும் குரு­ணாகல் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மாவட்­டங்­களில் மணித்­தி­யா­லத்­துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று ...

Read More »

ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு போராட்டம்!

கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்கு மாறியது. ஒப்பந்தப்படி ஹாங்காங்குக்கு என்று தனி சட்டம், தன்னாட்சி உரிமை மற்றும் குறிப்பிட்ட உரிமைகள் தொடருவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சு சுதந்திரம், நீதி சுதந்திரம், தனி சட்டம், தனியான பொருளாதார கட்டமைப்பு மற்றும் ஹாங்காங் டாலரை பணமாக தொடர்ந்து கையாள்வது ...

Read More »

ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் – வித்யா பாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், ...

Read More »

அநுராதபுரத்தில் 8000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் !

பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் 8000 பாது­காப்பு படை­யினர் பாது­காப்புக் கட­மையில்  அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் வலய காவல் துறை  ­ அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன தெரி­வித்தார்.   பொசன்­ உற்­ச­வத்தை  முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில்  அவ­ரிடம் வின­வி­ய­போதே அவர்  இவ்­வாறு தெரி­வித்தார். பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு  அநு­ரா­த­புரம் நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.  அவ்­வ­ல­யங்­களின் பாது­காப்­புக்­காக 4000  காவல் துறையினரும் 2000 இரா­ணுவ வீரர்­களும்  1000 சிவில் பாது­காப்பு படை­யி­னரும்   புல­னாய்­வு­ பி­ரிவு அதி­கா­ரிகள்,   கடற்­ப­டை­யினர்  என  மொத்தம்  8ஆயிரம்  பாது­காப்பு ...

Read More »

தர்ம சக்கர ஆடை விவகாரம் ! காவல் துறை அதிகாரிக்கு இடமாற்றம்!

மகியங்கனை, ஹசலக காவல் துறை  நிலையத்தின் பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் சந்தன நிஷாந்த  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   தர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு  ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக காவல் துறை  பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் இவ்வாரு குருணாகல் காவல் துறை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More »

பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா தயார்!

சகல இன மக்களிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் பயங்கரவாதச் செயற்பாடுகளை   ஒழிப்பதற்கும் தேவையான  அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய அமெரிக்கா தயாராகவுள்ளது. அதேபோன்று பயங்கரவாத தாக்குதல்களை  நாட்டில் இருந்து முழுமையாக  ஒழிக்க சிறிலங்கா  அரசாங்கம் கேட்கும் அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்  என்று அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்தாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தூதுவர்  எலைனா பீ.டெப்லிட்சுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று  ...

Read More »

அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள ஈழ அகதியின் வேண்டுகோள்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ  தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின்  குடிவரவு தீர்ப்பாயத்திற்கு  அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் ...

Read More »

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?

திரையுலகில் கதாநாயகர்களை விட, கதாநாயகிகள் மத்தியில் கடும் போட்டி இருந்து வருகிறது.போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, ‘நம்பர்-1’ இடத்தில் நயன்தாரா இருந்து வருகிறார். இரண்டாவது இடத்துக்கான கதாநாயகிகள் அடிக்கடி மாறி வருகிறார்கள். இவர்களில் தமன்னாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், சிரஞ்சீவி நடித்து வரும் ‘சாயிரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே ஒரு பாடலுக்கு தமன்னா நடனம் ஆடுகிறார். வேகமாக வளர்ந்து ...

Read More »

மனுஸ் தீவில் தனக்குத்தானே தீமூட்டி கொண்ட அகதி!

மனுஸ் தீவில் அகதி ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் அவர் உயிராபத்து எதுவுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சோமாலியாவை சேர்ந்த 30 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தீக்குளித்தார். அங்குள்ள அகதிகள் நல அமைப்பு வட்டாரங்களின் ஊடாக இந்த தகவல் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி பீடம் ஏறியது முதல் இதுவரை சுமார் 70 தற்கொலை முயற்சி சம்பவங்கள் ...

Read More »