எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் – வித்யா பாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியான சில வினாடிகளிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி உள்ளது.
இதில் அஜித் பேசும் ‘ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க’ என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Eelamurasu Australia Online News Portal