குமரன்

அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்!

கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும்  முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு — காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை  இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும். பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான மத்திய  அரசாங்கம் ஜம்மு — காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும்  ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் ...

Read More »

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது!

சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையா ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா – அமெரிக்கா கவலை

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ...

Read More »

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 5 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது. தற்போது ...

Read More »

17 லட்சம் போராட்டக்காரர்களால் ஸ்தம்பித்த ஹாங்காங்!

ஹாங்காங்கில் கொட்டும் மழையிலும் சீனாவுக்கு ஏதிராக 17 லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அந்நகரமே ஸ்தம்பித்தது ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு அடிபணிந்தது. ...

Read More »

வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

டிவி சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜனுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. டிவி சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன் தற்போது வைபவ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்க, பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வாணி போஜன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜயதேவரகொண்டா இந்தப் படத்தை தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். சென்னையைச் ...

Read More »

இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்!

இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.மேலும் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் இந்த முடிவால் அந்த நாடு காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக சீனாவுடன் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை கொண்டு வந்தது. ...

Read More »

அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற நிதி சேகரிக்கும் ஆவுஸ்திரேலியர்கள்!

மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற சிரிய அகதி  அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு ஆவுஸ்திரேலியர்கள் 1 இலட்சம் டொலர்களுக்கு மேல் நிதி சேகரித்திருக்கின்றனர்.   ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார். பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார். இந்த சூழலில், ஆவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ...

Read More »

பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம்!

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம்  பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து‌ கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், அண்மையில் பொது ஐன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர்களிற்கு ஆபத்தான பல விடயங்கள் அறிவிக்கபட்டிருப்பதுடன் தமிழர்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட கோத்தபய ராஜபக்ஷ ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருக்கிறார். இது மீண்டும் முள்ளிவாய்கால் நோக்கி ...

Read More »

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது. குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.      

Read More »