குமரன்

ஜெயம் ரவியின் அரசியல் கொள்கை!

லக்‌ஷ்மண் இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவி 25-வது படத்தை தொடுகிறார். அந்த படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:- ‘என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச வி‌ஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2’ ...

Read More »

நாளை கொழும்பில் தாக்குதல் நடத்தப்படலாம்!

நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என சமூக வலைத்தலங்களில் பரவிவரும்  தகவல்கள் உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை என காவல் துறை  பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவான் குணசேகர கூறினார். எனினும் தமக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் இலேசாக தாம் கருதவில்லை எனவும் அதனால் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் வீண் அச்சம் கொள்ளாது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.  

Read More »

அவலங்களைக் காட்சிப்படுத்தல்….! சமூகப் பொறுப்பு…!

  அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும். அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருகணம் எண்ணிப் பாருங்கள். நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை இக்காணொளிகள் தக்கவைக்கின்றன. இன்னொரு வகையில் இதில் இருந்து மீண்டெழுவதற்கு, இவை ...

Read More »

அவுஸ்திரேலிய நூலகத்தைக் கலங்கடித்த தூரியன்!

அவுஸ்திரேலியாவின் கான்பரா (Canberra) பல்கலைக்கழக நூலகத்தில் ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சி நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் கடுமையான வாடை குறித்த புகாரின் பேரில் தீயணைப்பாளர்கள் நூலகத்துக்கு விரைந்தனர். ஆறே நிமிடங்களுக்குள்ளாக அந்தக் கட்டடத்திலிருந்து சுமார் 550 பேர் வெளியேற்றப்பட்டனர். ஒரு மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பின்னர் குப்பைத் தொட்டியில் தூரியான் பழம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் கண்டுபிடிக்கக் கூடிய குழுவைச் சேர்ந்தோர் அந்த வட்டாரத்தின் காற்றுத் தரம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

Read More »

இந்தியாவில் ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை ஸ்தாபித்ததாக ஐ.எஸ் அறிவிப்பு

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இந்த மோதலின் போது, ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவ்வமைப்பின் அமாக் செய்திச் சேவை, நேற்றைய தினம் (10), செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவில் தாம் ஸ்தாபித்த இடத்துக்கு, ‘விலாயஹ் ...

Read More »

அயோக்யா! -விமர்சனம்

நடிகர் -விஷால் நடிகை ராஷி -கண்ணா இயக்குனர் -வெங்கட் மோகன் இசை- சாம்.சி.எஸ். ஓளிப்பதிவு- விஐ கார்த்திக் தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த ராஜ் சொல்லைக் கேட்டு  சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று ...

Read More »

பாகிஸ்தானில் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும்! சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ...

Read More »

தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் தகவல்களை தெரியப்படுத்துக!

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் காவல் துறை பிரிவிற்கு உரிய தகவல்களை தெரியப்படுத்துமாறு கோரப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பொறுப்பானவர்கள் 011-2444444, 011- 2337041 , 011-2337039 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்க முடியும் ...

Read More »

வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்!

அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளவில்லை. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ...

Read More »

தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன?

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களிற்கு பின்னர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின்  வீட்டிற்கு  வெளியே கூடிய சிலர் தங்கள் பகுதியை கண்காணிப்பதற்கான விழிப்புக்குழுவொன்றை ஏற்படுத்தினார்கள். தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தவர்கள்  மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம் அந்த வீட்டிற்குள்ளிருந்தவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டிருந்தனர். தங்கள் குடும்பத்தவர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதால் அவர்கள் தங்களிற்கு என்ன நடக்குமோ என்ற கவலையிலும் அச்சத்திலும் சிக்குண்டிருந்தனர். எனது சகோதரர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்டதால் மக்களின் முகத்தை பார்ப்பது கடினமாகவுள்ளது  என தற்கொலை குண்டுதாரியின் சகோதரியொருவர் ...

Read More »