குமரன்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி என குற்றச்சாட்டு!

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான சிறிலங்கா தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்; பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார். மலேசிய பிரஜைகளே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே  விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல்  இவர்களை கண்காணித்து வந்ததாக  அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார் ...

Read More »

காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக ...

Read More »

லட்சுமி மேனனுக்கு திருமணம்?

கும்கி, சுந்தர பாண்டியன், கொம்பன், றெக்க படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது. அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் ...

Read More »

2018 மற்றும் 2019-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018 மற்றும் 2019-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பெண் எழுத்தாளர் உள்பட இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான ...

Read More »

தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர்!

எமது நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்­பெற உள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் களம் இப்­போது சூடு பிடித்­தி­ருக்­கின்­றது. நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி தொடர்பில் நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பு மேலோங்­கிக்­கா­ணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் கருத்­துகள் இப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தேர்தல் வாக்­கு­று­திகள் எந்­த­ள­வுக்கு சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தனை பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்டி இருக்­கின்­றது. பல்­வேறு ...

Read More »

எனது நடிப்பை பலரும் பாராட்ட காரணம் இதுதான்- சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தனது நடிப்பை பலரும் பாராட்டுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் மே மாதம் என்.ஜி.கே படம் வெளியானது. தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். நான் சகஜமாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதாக பலர் பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகையாக எனக்கு ...

Read More »

கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை !

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி  மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கண்டாவளை  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதானமாக   கல்லாறு  உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்  கல்லாறுப் பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் மண் அகழ்வதற்கான அனுமதியினை தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளமை விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது மண்ணகழ்வுக்கு ...

Read More »

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  தனித்து வேட்பாளரை களமிறக்காத நிலையில் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி இருந்து வந்தது. இந் நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் சிறிபால டிசில்வா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ...

Read More »

ஹாங்காங்கில் ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!

ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல ஓவியம் வரையப்பட்டிருக்கும். “அந்தச் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலியாவில் பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை கைது செய்த காவல் துறை  அவரை சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் 5-வது மிகப்பெரிய நகரமான இன்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஆன்ட்ரியாஸ் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த நாடின் ஹின்டர்ஹோல்சர் (19) என்ற இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக நாடின் ஹின்டர்ஹோல்சர், ஆன்ட்ரியாசை பிரிந்து சென்றார். அதன் பிறகு நாடின் ஹின்டர்ஹோல்சர், ...

Read More »