2018 மற்றும் 2019-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018 மற்றும் 2019-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பெண் எழுத்தாளர் உள்பட இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பிற்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, 2018-ம் ஆண்டுக்கான வழங்கப்பட இருந்த  இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019-ம் ஆண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.
நோபல் பரிசு
இந்நிலையில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கான இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2018-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு போலந்து நாட்டை சேர்ந்த ஒல்கா டோகார்சுக் என்ற பெண் எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, 2018-ம் ஆண்டுக்கான வழங்கப்பட இருந்த  இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019-ம் ஆண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.