குமரன்

வீசா வழங்குவது இடைநிறுத்தம்!

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

Read More »

சிறிலங்காவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Read More »

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போது மூச்சு திணறி பெண் உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட பெண் மூச்சு திணறி உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கேக்குளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது. அதனை ...

Read More »

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர் உள்பட ...

Read More »

நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம்….!

நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தான் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா இயக்கி இருக்கிறார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சரத்குமார் கூறியதாவது:- “சினிமா, ...

Read More »

சீனாவுக்கே பூமராங்காக திரும்பிய ‘பயோ-வெப்பன்’?

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன உலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர்-ஆயுதங்களை(பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயல்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் ...

Read More »

தகவல்களை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 0086-10-65321861 மற்றும் 0086-10-65321862 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை தெரிவிக்க முடியும். சீனாவில் 860 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரேனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More »

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை ...

Read More »

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் கொண்ட விமானமான ‘போயிங் 777 எக்ஸ்’ விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானம் ‘போயிங் 777 எக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது. அந்த நகரில் உள்ள பெயின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ...

Read More »

நான் முஸ்லிம்.. மனைவி இந்து.. எங்கள் பிள்ளைகள் இந்தியர்கள்!-நடிகர் ஷாருக்கான்

நான் முஸ்லிம், எனது மனைவி இந்து, எங்கள் பிள்ளைகள் இந்தியர்கள் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களில் சிலர் சட்டத்தை எதிர்த்தும் வேறு சிலர் ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தி நடிகர் ஷாருக்கான் பொதுவான சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: எங்கள் வீட்டில் இந்து, முஸ்லிம் என்று ஒருபோதும் விவாதித்தது கிடையாது. எனது மனைவி ...

Read More »