குமரன்

சமந்தாவுடன் நடிப்பது கடினமாக இருக்கிறது! – நாக சைதன்யா

நடிகை சமந்தாவுடன் நடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று அவரின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார். “இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் செலவிடுகிறோம். இந்த படத்தில் நாங்கள் ...

Read More »

பாகிஸ்தான் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுதலை!

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் திகதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தீவிர மதபற்றாளர்கள் ...

Read More »

நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து மந்திர ஆலோசனை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை நீடிக்குமிடத்து நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து மைத்திரி தலைமையிலான அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மைத்திரி தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்துவருவதாகவும் தற்போதைய பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சிகள் வெற்றிபெறாவிடின் அதனை அடுத்த தெரிவாக மைத்திரி கொண்டுள்ளதாகவும் அரசாங்க மட்டத்தில் தெரியவருகின்றது. மேலும் ஜனாதிபதிக்கு எந்தவொரு விடயம் குறித்து உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 86 ஆவது பிரிவின் ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் ...

Read More »

நான் குற்றமற்றவன்! -நிஸாம்தீன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர், குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு அவுஸ்திரேலிய காவல் துறயால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நான் மாணவர் வீசாவில் இருந்ததுடன், ஆசிய பிரஜையாக இருந்தமையே காரணமாகும் என அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பிரஜை கமர் நிஸாம்தீன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா பிரஜையான கமர் நிஸாம்தீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். நேற்று ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் பயணித்த தொடருந்து!

அஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் வேகமாக சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சரக்கு தொடருந்து 268 பெட்டிகளைக் கொண்டுள்ளது. அது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் பயணித்துள்ளது. அந்த தொடருந்து தடம் புரண்டதில் சுமார் 1,500 மீட்டர் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.அந்த ரயில் சுரங்க நிறுவனமான BHPக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக ஒருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. ஓட்டுநரில்லா தொடருந்தில்  விபத்து நேரக்கூடுமென அஞ்சிய ...

Read More »

ஆபத்துக் காலத்தில் உதவும் செயலி!

தனிநபர் பாதுகாப்பு நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் வரிசையில் வருகிறது ‘ஷேக்2சேப்டி’ செயலி. இந்தச் செயலியை நிறுவுவதன் மூலம், அவசர காலத்தில் உதவி தேவையெனில், போனை  ‘ஷேக்’ செய்வதன் மூலம் நெருங்கிய நபர்களுக்கு உதவி கோரிக்கை அனுப்பி வைக்கலாம். இருப்பிடம் பற்றிய தகவல், ஒளிப்படமும் அனுப்பி வைக்கப்படும். பவர் பட்டனை நான்கு முறை அழுத்துவதன் மூலம் இதை இயக்கலாம். செயலியை  நிறுவியவுடன் அவசர காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள், முதியவர்கள், சிறார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக ...

Read More »

சிறிசேனவின் இரண்டாவது சதிப்புரட்சி !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து வருடகால இடைவெளிக்குள் இரண்டாவது அரசியல் சதிப்புரட்சியில் பங்காளியாகியிருக்கிறார்.   முதலாவது சதிப்புரட்சியில் அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறி 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார்.அதை ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் துரோகத்தனமான செயல் என்று கருதினர். தற்போதைய சதிப்புரட்சி 26 அக்டோபர் 2018 அன்று ஜனாதிபதி சிறிசேன முன்னாள்  ஜனாதிபதி ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததையடுத்து அரங்கேறியிருக்கிறது.அவரின் இந்த நடவடிக்கை இலங்கையில்  எனக்கு தெரிந்த அனேகமாக சகலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சிறிசேன ...

Read More »

நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு மைத்திரி திட்டம்!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதிய பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், – நாடாளுமன்றத்தை இன்றிரவு ...

Read More »

ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தவில்லை!

மதநிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியதாக ஐ.நா. மறுத்துள்ளது. பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு ...

Read More »

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது என்ன ?

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குமென தமிழ் தேசிய கூட்டமைப்புக் குழு ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளது.   இதேவேளை, தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதியும் குறித்த வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாகவும் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ...

Read More »