குமரன்

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நிர்க்கதியில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னரும் கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில், ...

Read More »

அருவா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்?

ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் அருவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே., காப்பான் படங்கள் வந்தன. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஹரி இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்துக்கு அருவா என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஆறு, ...

Read More »

பாரதியாருடன் கொரோனாவை ஒப்பிட்டு குட்டிக் கதை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுடன் பாரதியாரை ஒப்பிட்டு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் டுவிட் செய்துள்ளார். இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்காக இவர் எழுதிய குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. Arunraja Kamaraj ✔@Arunrajakamaraj சாதிகள் இல்லையடி பாப்பா #எல்லாசாதியையும்சமமாகபார்க்கும் #மகாகவிகொரோனா#CoronaAlert 3,543 முற்பகல் 10:31 – 4 மார்., 2020 Twitter ...

Read More »

கொரோனாவால் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம்!

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் வெளியாகும் திகதியில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக ‘நோ டைம் டூ ...

Read More »

கோடை வெயிலின் தாக்கம் கொரோனாவை கட்டுப்படுத்துமா?

கோடை வெயிலின் அதிகரிப்பால் கொரோனா வைரஸ் கட்டுப்படுமா? என்ற கேள்விக்கு விடை காண்போம்.கடந்த காலங்களில் உலகில் பல நாடுகளில் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்கள் தாக்கியபோது இந்தியாவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு இந்தியாவில் நிலவிய வெப்பம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இங்கு அதிக வெப்பநிலை நிலவியதால் அந்த கிருமிகளால் தாக்குபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதேபோல தற்போது பரவி வரும் கொரோனா வைரசும் வெப்பநிலையை தாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர். தற்போது ...

Read More »

படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் – சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு

படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுகின்றது- சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு கொரோனாவைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகமாக காணப்படுவது சிங்கப்பூர் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தரைகளையும் கழிவறைகளையும் சுத்தம் செய்வதற்கு வழமையாக பயன்படுத்தும் தொற்றுநோய் நீக்கிகள் மூலம் நாளொன்றிற்கு இரண்டு தடவை சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ்களை அழிக்கலாம் எனவும் சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. சீனாவில் நோயாளிகள் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் மூலம் நோய் கிருமிகள் அதிகளவில் பரவியதை தொடர்ந்து இது ...

Read More »

கொரோனா வைரஸ் – பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா அச்சம்!

கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த பல வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் அவசரகால திட்டங்களை உருவாக்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் நிலை குறித்து அவுஸ்திரேலியா கவலையடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை அவுஸ்திரேலிய மக்களை வழமை போன்று நடந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நீங்கள் கடைக்கு செல்லும்போது முகக்கவசத்தை ...

Read More »

ஒரு வாரமாக முகத்தை தொடாத ட்ரம்ப்!

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது முகத்தை ஒருவாரமாக தொடவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் கலிப்போர்னியா போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் அமெரிக்கா 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க சுகாதாரத் துறை தீவிரமாக இறங்கி உள்ளது. கரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதால் அதன் பரவலை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டமும் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை ...

Read More »

விடுதலையை கோரி அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்ற ஈழத்தமிழ் மாணவி!

நீண்டகால தடுப்புமுகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், ஆண்டு 12 இல் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவியே அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ளார். பத்து ஆண்டுகளாக தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த தமிழ் அகதிகள் இருவரும், மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையான வாழ்வுக்குள் சிக்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது. மெல்பேணில் உள்ள மைற்றா தடுப்புமுகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்புமுகாம் வாழ்வை முடிவுக்கு ...

Read More »

சிரிப்பு தான் எனது பலம்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சிரிப்பு தான் தனது பலம் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் குறையவில்லை. அவர் அளித்த பேட்டி வருமாறு:- நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன். அதுதான் எனது பலம். ஒவ்வொரு படமும் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொடுக்கும். சினிமாவை ஒரு தொழிலாகவோ, வெற்றி தோல்வியை வைத்தோ பார்க்க மாட்டேன். நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. அதை பார்த்து பெருமை ...

Read More »