பாரதியாருடன் கொரோனாவை ஒப்பிட்டு குட்டிக் கதை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுடன் பாரதியாரை ஒப்பிட்டு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் டுவிட் செய்துள்ளார்.

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்காக இவர் எழுதிய குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும் “சாதிகள் இல்லையடி பாப்பா….   எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா” என குறிப்பிட்டிருந்தார்.