பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் ...
Read More »குமரன்
வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதனைத்தடுத்து நிறுத்துமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்ககைதிகளை வவுனியா சிறைச்சாலையில் வைத்திருக்குமாறு கோரியே இன்று காலை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா மாவட்ட கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளும் இன்று காலை உணவைப் பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்பு ...
Read More »போர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை!-பூபாலரட்ணம் சீவகன்
இலங்கைப் போரில் பலியானவர்களை நினைவுகூருவதற்கான காலப்பகுதி நெருங்குகின்றது. தமது உறவினர்களை, நண்பர்களை, முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந்தக் காலப் பகுதியை பயன்படுத்துகிறார்கள். இறந்தவர்களை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பெரும் அனர்த்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருதல் பலவகைகளில் பயந்தரக்கூடிய ஒன்றுதான். முக்கியமாக தமது உறவுகளை இழந்தவர்களுக்கு மன ஆறுதலுக்கு இது பெரிதும் உதவும். அவர்கள் தமது மனவடுக்களை முடிந்தவரை ஆற்றிக்கொள்ள நீத்தாரை நினைவூரல் உதவும். இந்த நினைவுகூரலை முன்பு அரசாங்கத்தரப்பு எதிர்த்து வந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது இப்போது குறைந்துவிட்டது. ஆனால், ...
Read More »பிக்பாஸ் 2 – பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் யார், யார் பெயர் பட்டியலில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் டீசரை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி ...
Read More »NSW மாநில சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இனித் தேவையில்லை!
NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், விரைவில் டிஜிட்டல் ஓட்டுனர் உரிமங்களை (drivers license) பெற இருக்கிறார்கள் என்று NSW அரசு அறிவித்துள்ளது. இது குறித்த சட்ட முன்வடிவு அடுத்த இரண்டு வாரங்களில் NSW நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டப்போ (Dubbo) நகரில் டிஜிட்டல் லைசன்ஸ் பரீட்சித்துப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி மாநிலம் முழுவதும் அதை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவரின் அடையாள அட்டையாகவும், ஆதார பத்திரமாகவும், Pubs மற்றும் Clubகளில் நுழைவதற்கும், காவல்துறையின் சாலைச் சோதனைகளுக்கும் டிஜிட்டல் லைசன்ஸ் ...
Read More »அமெரிக்க ரகசிய அறிக்கையில் சிறிலங்கா தொடர்பில் வெளியான தகவல் !
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக சிறிலங்காவால் சீனா கடன் வலையில் வீழ்த்தி இருப்பதாக, அமெரிக்காவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவார்ட் ஆய்வாளர்கள் குழு ஒன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்காக மேற்கொண்ட இரகசிய ஆய்வு அறிக்கை ஒன்று, அவுஸ்திரேலியாவின் பினன்ஸ் ரிவீவ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறிலங்காவில் சீனாவின் கடன்வலையில் சிக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக முன்னைய அரசாங்கத்தினால் 8 பில்லியன் டொலர்கள் சீனாவிடம் இருந்து கடன்பெறப்பட்டது. இந்தகடன் தொகையை ...
Read More »மீண்டும் பரவும் எபோலா நோய்!
எபோலா நோய் மீண்டும் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2013-ம் ஆண்டு ‘எபோலா’ நோய் பரவியது. முதலில் கினியா நாட்டில் பரவிய நோய் பின்னர் சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்தது. இதில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். ...
Read More »வடக்கு கிழக்கில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்!
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வடக்கில் ஆவா குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் விசேட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
Read More »60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய உத்தமர்!
60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் அவுஸ்திரேலிய செஞ்சிலுவை ரத்த தான சேவை அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு தங்கத்தினால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. ஜேம்ஸ் ஹாரிசன் என்பவருக்கு 14 வயதில் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவருடைய ரத்தத்தில் நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டிபாடி அதிகம் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் ஆண்டி D என்ற மருந்தை மேம்படுத்தி, பிரசவத்தின் போது ரத்தம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தைகளை ...
Read More »பாகிஸ்தானில் முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் யூசப் சலீம்!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் யூசப் சலீம் அந்நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர்வெழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21வது இடத்தை பிடித்தார். ஆனால் அவரது பார்வைக்குறைப்பாட்டை காரணம் காட்டி அவருக்கு மாவட்ட சிவில் நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ...
Read More »