இந்த வருடத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்க்பபடும் பொது தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தலின் போது 2019 தேருநர் இடாப்பு பயன்படுத்தப்படுவதனால் அந்த பாராளுமன்ற தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் வாக்காளர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல். தேர்தல் ...
Read More »குமரன்
இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்!
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று ; சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இலங்கை தமிழர்களுக்கு எதிராக ...
Read More »சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை படத்தில் அமிதாப் பச்சன் !
தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். வாழ்க்கை வரலாறு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கையும் படமாகிறது. இவர் பாலம் அமைப்பு மூலம் சமூக சேவை பணிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி பரிசு தொகையை பொதுத்தொண்டுக்கே திருப்பி கொடுத்தார். ஆங்கிலத்தில் வெளியான பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை கதை புத்தகத்தை ...
Read More »அனுசரணையில் இருந்து விலகியது சிறிலங்கா!
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Read More »எது சரியான மாற்று அணி? ?
விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் ...
Read More »‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’!
ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட நிரூபர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா, இந்தியா என உலகின் 25க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ...
Read More »‘ரணிலை சி.ஐ.டி விசாரிக்கும்’
அடுத்த வாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சி.ஐ.டியினர் அழைத்து விசாரணைகளை முன்னெடுப்பார்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, தன்னைக் கொலை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து சூழ்ச்சி செய்த விவகாரம் தொடர்பில் தன்னால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்றார்.
Read More »மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகமாட்டோம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து மாத்திரமே இலங்கை அரசாங்கம் விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மனித உரிமைகள் பேரவைகள் பேரவையிலிருந்து முழுமையாக விலகத் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த பிரேரணையிலிருந்து விடுபட்டாலும், மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலக தீர்மானிக்கவில்லை என்றும், அந்த ஆணைக்குழுவுக்குள் ஒரு நாடு என்ற வகையில் சிறிலங்கா தொடர்ச்சியாக ...
Read More »இந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை ...
Read More »தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம்!
ஊழல் மோசடியாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ‘ மார்ச் 12 ‘ அமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு தேர்தலின் போது வேட்பாளரொருவருக்கான செலவுக்கான வரையறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்திப்பு தொடர்பில் மார்ச் 12 அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது : பொதுத் தேர்தலில் ஊழல் மோசடிகளற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக பொறுத்தமானவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ; ‘ மார்ச் 12 ‘ அமைப்பு அனைத்து ...
Read More »