சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழ் புத்தாண்டை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மொங்கா, படத்தை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியில் ரீமேக் முடிவு செய்துள்ளாராம். சூரரைப்போற்று படத்தில் நடித்த அதே நடிகர்களை இந்தி ரீமேக்கிலும் நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal