குமரன்

மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரியுள்ளார். ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். ப்ரெட்ரிக் என்பவர் இயக்கிய இப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் ” AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு ...

Read More »

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது – ஒரே நாளில் 138 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.72   லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 ...

Read More »

பேரபாயத்தை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்

1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், ‘புல்டோசர்’ இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக் குளத்துக்குள் போடும்படி, கூறுகிறார். சிலநாள்களின் பின்னர், அந்தக் கற்றூண், அம்பாறையில் உள்ள கல்லோயா அபிவிருத்திச் சபையின் அலுவலகத்துக்கு முன்னால், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காரணம், அந்தக் கற்றூணில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட சாசனம் காணப்பட்டது. அதில், குளத்துநீரை நீர்ப்பாசனத்துக்காகப் பங்கிடுவது தொடர்பான விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லோயாப் பிரதேசம், சிங்கள ...

Read More »

வாழைச்சேனையில் மோட்டர் குண்டு மீட்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில், பாவிக்க முடியாத நிலையில், கைவிடப்பட்டிருந்த  மோட்டார் குண்டொன்று, இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை காவல் துறையினர் தெரிவித்தனர் வாழைச்சேனை, குறிஞ்சிமலை  வீதியில், மணல் குவிக்கப்படும் மண் யாட் பகுதியில் குறித்த மோட்டர் குண்டு இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர், காவல் துறையினர் விரைந்து, மேற்படி  மோட்டர் குண்டை மீட்டு, எடுத்துச் சென்றுள்ளனர்.

Read More »

அமரர் ஆறுமுகனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமானது. அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் மதியம் 02 மணிக்கு கொட்டகலையிலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வினை அடுத்து, பலர் இரங்கல் உரையாற்றினர். இதனையடுத்து, இந்தது சமய முறைப்படி இறுதி சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இறுதிக்கிரியைகளை அடுத்து, அக்கினியுடன் சங்கமமாகியது.

Read More »

அவுஸ்திரேலியாவில் ‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் காலமானார்!

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக ...

Read More »

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும்

கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென்றவர்களின் தவறா, முண்டியடித்து நிவாரணத்துக்குச் செல்வதற்கான நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தின் தவறா? இலங்கை ...

Read More »

சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று (29) வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழந்தனரென, தவறான தகவலை வெளியிட்டமை குறித்தே, இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது. தலாஹேனவில் அமைந்துள்ள  சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர்  வாக்குமூலத்தை பெறவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

ரணில் – சஜித் தலைமையில் தனித்தனி கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (29) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம், கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

ஈரான் மக்களை கொதித்தெழுச் செய்த ஆணவக் கொலை

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம் தான் ஈரானில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க முடியாத அவர் தந்தை அவரை ஆணவ கொலை செய்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டுள்ளார். ரேசா அஷ்ரப் ...

Read More »