தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கண்ணன் இன்று காலமானார். பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் (69). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று(ஜுன் 13) மதியம் அவரது உயிர் பிரிந்தது. கண்ணனின் உடல் ...
Read More »குமரன்
’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை
ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்…. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்து பீரங்கிகள் வரையிலான ஆயுதங்கள் எல்லாவற்றையும் ...
Read More »ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் ஏற்கெனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது
Read More »மகளை தொட முடியாமல் தவிக்கும் நடிகை
தனிமைப்படுத்தப்பட்டதால் தன் மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை கூறியிருக்கிறார். ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜை 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். தற்போது தனிமைப்படுத்தல் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி மனைவி, குழந்தையை சந்தித்தார். இதுபோல் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இவர் தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது டிஜிபூட்டி என்ற ...
Read More »1.7 லட்சம் சீனா ஆதரவு கணக்குகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்
சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது. உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் செயல்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ 33 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ...
Read More »வல்வையில் குண்டு வெடிப்பு ! இராணுவ அதிகாரி காயம்!
நெல்லியடி காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட வல்லைவெளிப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் வெடிபொருள் என்று நம்பப்படும் மர்மப் பொதி ஒன்று வெடித்ததில் காயம் அடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பொதி ஒன்றை விழுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார். அதனை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை ...
Read More »வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம்! – சுகாஸ் அழைப்பு
கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம். இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகருமான சுகாஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; தமிழர்களுடைய தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கிலே முக்கியமான பகுதி கிழக்கு மாகாணமாகும். இவ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளில் ஒன்றான தாயகக் கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் கிழக்கு மாகாணம் ...
Read More »எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா
பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார். நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு ‘அடக்கடவுளே ! அவர் யார் ?’ என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More »ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீராங்கனை, பணத்திற்கு ஆசைப்பட்டு ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. இவருக்கு 25 வயது ஆகிறது. ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் கார் பந்தயங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ரினி கிரேசிக்கு வருமானம் இல்லை. இந்த நிலையில் அவருக்கு ஆபாச படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படங்களில் நடித்தால் அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கிய ரினி கிரேசி ...
Read More »இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால்……..
தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். ;அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் ...
Read More »