குமரன்

தவறை ஒப்புகொண்டது கூட்டமைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும் அறிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. “நல்லாட்சி ...

Read More »

மேதகு பிரபாகரனால் சபையில் சர்ச்சை

நேற்று  நாடாளுமன்றத்தில்   வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார். தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு கட்டத்தில் “மேதகு பிரபாகரன்” என விளித்து கூறிவிட்டார். இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களில் சிலர், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பினர். அப்போது, சபைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ​​​வேலுகுமார் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்தார். முதலாவதாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் பெண் உறுப்பினரை பார்த்து, “ வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு ...

Read More »

தமிழக நாடோடிகளின் அவலங்கள்

‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ தங்களை ‘நாடோடிப் பழங்குடியினர்’ (Nomadic Tribes) எனத் தனி இனத்தவராகக் கருதவும், கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வேண்டியும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது. இது சாதி அட்டவணைப்படுத்துதலின் போதாமையையே சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பூர்வகுடிகளான இவர்களை அலைகுடிகள், காலோடிகள் எனவும் அழைக்கலாம். சங்க காலத்தில் பாணர், பொருநர், விறலியர், பாடினியர், கூத்தர், அகவுநர் போன்ற நாடோடிக் குழுக்கள் இருந்தது, சங்க இலக்கியங்கள் வழி அறியப்படுகிறது. இவர்கள் குறவர், எயினர், ஆயர், உழவர், பரதர் போன்ற நிலைகுடிகளின் கொடையில், ...

Read More »

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்) ஏலம் போனது. பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. அப்போது ஏராளமான நபர்கள் பிரதியை வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில் அந்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ...

Read More »

ஜெய் பீம் விவகாரம் – சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது ...

Read More »

தமிழ் இராச்சியத்தின் அரிய கல்வெட்டு

புகைபடர்ந்திருக்கும் இலங்கை தமிழரின் வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டும் வகையில், திருகோணமலையில் மிக அரிய தமிழ்க் கல்வெட்டு, பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு. திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில், கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம், கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது, இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்துக்குரிய அழிவடைந்த சிவாலயமும் அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திவாரங்களும் காணப்படுகின்றன. இங்கு ...

Read More »

சஹ்ரானை கைது செய்ய 340 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டதாக  முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர் நிலந்த ஜயவர்தன  தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட ...

Read More »

ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலியா

ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது. ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் உள்துறை மந்திரி கரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். ...

Read More »

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேர் பலியாகலாம்

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், செக்குடியரசு, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல ஜெர்மனியிலும் நோய் தாக்குதல் பல ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு ...

Read More »

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் படத்தில் உள்ளனர். இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்த நந்தா, ...

Read More »