வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ...
Read More »குமரன்
உடல் குறைப்பாட்டுடன் இந்திய தம்பதிக்கு பிறந்த குழந்தை: நாடுகடத்தும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரான வருண் கட்யால் ஐரோப்பிய சமையல் குறித்து கற்பதற்காக ஆஸ்திரேலியா சென்று பின்பு ஆஸ்திரேலியாவிலேயே தனது பணி வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார். இந்தியரான ...
Read More »இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்
இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை ...
Read More »உலகில் பாதுகாப்பான நகரம் ‘துபாய் – ஆய்வில் தகவல்
துபாய் காவல் துறை பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சூழ்நிலையை துபாய் நகரம் கையாண்டு வரும் விதமும் இதற்கு ஒரு காரணமாக திகழ்ந்து வருகிறது. துபாய் நகரம் தனது சமூக, ...
Read More »ராஷ்மிகாவின் நடிப்பு என்னை மலைக்க வைத்தது
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் திகதி வெளியாகி உள்ளது. ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் திகதி வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி அளித்த பேட்டி வருமாறு: “என் ...
Read More »சூழற் படுகொலையில் சிறிலங்கா அரசாங்கம்!
இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இவற்றை நிர்மாணிப்பதற்காகச் சீன நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமைமிக்க வெகு சில இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படும் சிங்கராஜாக் காட்டைச் சீர்குலைப்பது சூழற்படுகொலையே அன்றி வேறல்ல. இனப்படுகொலையாளிகளான இவர்களுக்கு இது ஒருபொருட்டாகவே இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ...
Read More »நடுகல்லிலும் கூட இனஒதுக்கல்
ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில் இளையவர்களுக்கு ...
Read More »ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், தேவன் கான்வே- டாம் லாதம் ஜோடி அபாரமாக விளையாடியது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 271 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் விளாசினர். பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (20), ஹென்ரி நிக்கோல்ஸ் (13) ...
Read More »அவருக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது – மதன் கார்க்கி
தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 2019-ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது. அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தலைவி ...
Read More »வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி நகரம்… 18000 பேர் வெளியேற்றம்
தொடர் மழையால் சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரம் சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 100 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிகளவு ஆகும். 1961-ம் ஆண்டு இதே போல மிக பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல ...
Read More »