குமரன்

ஈழத்தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்- வைகோ

ஈழத்தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்தவேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில், தடுக்கி விழுந்தால் ஒரு படை முகாம் அமைத்து, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கிய கொடுமை தொடருகின்றது. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக் கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறிக்கின்றது. அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென ...

Read More »

சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’

காங்கேசன்துறை  (கே.கே.எஸ்) சிமெந்து  தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில்  இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள்  அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன.   காணாமல் போன இயந்திரங்களுக்குஇதுவரை  ஒருவரினாலும்   இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை. அவற்றை விற்றவர் யார்?, எந்த நோக்கத்திற்காக அந்தப்  பணம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது, ஆனால் சிமெந்து  தொழிற்சாலையின் 20க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர், ஏனெனில் ...

Read More »

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் புதன் கிழமை காலை 8.45 மணிக்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று காலை 8.45 மணியளவில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றமையால் அந்த நேரத்திலேயே இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...

Read More »

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம்

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அவர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருகின்றது. இதேபோல யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் நேற்றும்(நேற்று முன்தினம்) இன்றுமாக(நேற்று) இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், 77 வயது, 59 வயது நபர்களே இவ்வாறு மரணமாகினர். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு ...

Read More »

வெற்றியை குறிவைக்கும் சமந்தா

சக நடிகைகள் ஓடிடியில் தோல்வியை தழுவினாலும் சமந்தா வெற்றி பெற்றே தீர்வேன் என்று நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. முதலில் ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படம் கூட ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் ‘மிஸ் இந்தியா’, ‘பென்குயின்’ என தான் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த இரு படங்களை ஓடிடி-யில் வெளியிட்டார். அந்த இரு படங்களுமே படுதோல்வியைத் தழுவின. அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் ...

Read More »

அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம்,  இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் மட்டு.மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று ...

Read More »

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு

பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. வர்த்தகம், ...

Read More »

முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ். தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200 கோடி ...

Read More »

ட்ரோன்களை சிறிலங்காவுக்கு ஆஸ்திரேலியா! -தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்

இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறைக்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளமைக்கு ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. “பல்வேறு குற்றச்செயல்களைத் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ட்ரோன்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்காணிக்கவுமே உதவும்,” என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல்

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம்  கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுக் கூறுவதற்காக , பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் மெல்கம் ; கர்தினால் ரஞ்சித் ஆண்டகை திறந்து வைத்திருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...

Read More »