இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் புதன் கிழமை காலை 8.45 மணிக்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று காலை 8.45 மணியளவில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றமையால் அந்த நேரத்திலேயே இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு வருடங்கள் கடந்தும்  பாதிக்கப்பட்டவர்களுக்குஇன்னமும் நீதி வழங்கப்படவில்லை என கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.