குமரன்

மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை!

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து, அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் ...

Read More »

குண்டு படத்தில் சர்வதேச அரசியல் இருக்கிறது!

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் சர்வ தேச அரசியல்  இருக்கிறது என்று நடிகர் தினேஷ் கூறியிருக்கிறார். ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படத்தை அடுத்து குக்கூ, விசாரணை, திருடன் போலீஸ், அண்ணனுக்கு ஜே என பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த வரிசையில் தற்பொழுது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ...

Read More »

சஹ்ரானின் சகோதரன் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு!

தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் ச​கோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ரிழ்வானின் மாமனார் மற்றம் மாமியார் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார். ரிழ்வானின் மனைவியும் பலியாகிவிட்டார். அவர்களுடைய காத்தான்குடி வீட்டிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 ...

Read More »

அடிப்படைவாத கொள்கையால்  அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்!

பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய  பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  முன்னாள்  பாதுகாப்பு  செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை  நியமித்தார். இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ  இல்லத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ...

Read More »

வௌ்ளை நிற பாவாடைகளை வைத்திருந்த இருவர் கைது!

திஹாரியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணஞ்செய்த வானொன்றிலிருந்து 28 வௌ்ளை நிற பாவாடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 41 மற்றும் 47 வயதுகளையுடையவர்களாவார். குறித்த இருவரையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் காவல் துறையினர்  தெரிவித்தனர்.  

Read More »

மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் – நித்யா மேனன்

தயாரிப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதோ, பயப்படுவதோ இல்லை, பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நித்யா மேனன். தமிழில் கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இடையில் என்டிஆரின் வாழ்க்கை படமான ‘கதாநாயகுடு’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது 12 ...

Read More »

தேடுதல் வேட்டை தொடர்கிறது!- 160 பேர் கைது!

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்­போ­தைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெள­லவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொரு­ளாளர் மொஹிதீன் பாவா மொஹம்மட் பைசர் மற்றும் சாய்ந்­த­ம­ருது பகு­தியில் பாது­காப்பு தரப்­பி­ன­ரு­ட­னான  மோதலில் கொல்­லப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மனைவி எனக் கரு­தப்­படும் பெண் ஆகி­யோரை எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­மறி­யலில் வைக்க மட்­டக்­க­ளப்பு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. சந்­தேக நபர்­க­ளான நால்­வ­ரையும் கடந்த 28 ஆம் திகதி மாலை  கைது செய்த காத்­தான்­குடி பொலிசார் அவர்­களை 72 மணி நேர ...

Read More »

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததை அமெரிக்கா வரவேற்று உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருப்பதை பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ளன. அந்தவகையில் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது. இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடை பட்டியலில் சேர்த்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. ...

Read More »

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார் ஸ்மித்!

12-வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் அணியில் இருந்து பிரியா விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது. இந்த தடை முடிந்து பல டி20 தொடரில் விளையாடி வந்தநிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் ...

Read More »

அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு!

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் குறித்த தேவாலையம் அமைந்துள்ளது. குறித்த ...

Read More »