குமரன்

தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர்  இனநாயக நாடாக சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது. ஓக்லாண்ட் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஓக்லாண்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து

மார்டின் குப்திலின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ...

Read More »

கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்

சினிமா இயக்குனர்களாக பெரும்பாலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் இயக்குனர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம். தமிழ் திரைப்படத் துறையில் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற துறைகளில் மட்டுமே பெரும்பான்மையான பெண்களின் பங்களிப்பு உள்ளன. ஆண் இயக்குனர்களுக்கு நிகராக பெண் இயக்குனர்கள் இடம்பெறவில்லை என்றாலும், வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள் பட்டியலில் சில பெண் இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர். டி.பி.ராஜலட்சுமி அவர்களில் முதன்மையானவர் டி.பி.ராஜலட்சுமி, தமிழ் சினிமாவிலும், தெலுங்கிலும் முதல் பெண் நடிகை இவர். தமிழ் சினிமாவில் ...

Read More »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான மூளைசாலி யார்?

இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, ‘கறுப்பு ஞாயிறு’ ஆக, அனுஷ்டித்தனர். அந்த அமைதிவழிப் போராட்டத்துக்கு, ஏனைய மதத் தலைவர்களும் ஆதரவளித்தனர். இன்னும் சில மதத் தலைவர்கள், தேவாலயங்களுக்குச் சென்று, எதிர்ப்புப் போராட்டத்திலும் இணைந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின்  உண்மையான  மூளைசாலி யார் என்பதை வெளிப்படுத்துவதே எமது முயற்சியாகும் என்றார். ‘கறுப்பு ஞாயிறு’ எதிர்ப்புப் பேராட்டம், கொழும்பு, கொச்சிக்கடை புனித ...

Read More »

அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களின“ நிலை என்ன?

கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஆஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலிலிருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் இதுவரை 115 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்றதாக சுமார் 8 ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகதிகள் பல ஆண்டுகள் கழித்து விடுவித்துள்ளமை குறித்த ...

Read More »

மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்

வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ...

Read More »

மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’

“பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக மீட்கப்பட்ட குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதான திலினி யேஹன்சா என்ற யுவதியின் பேஸ் புக்கில் எழுதப்பட்டிருக்கும் வசனமாகும். அந்த யுவதி, ஒரு இளைஞர் சமூக ஆர்வலர், சமூகத்தில் நல்மதிப்பை கொண்டிருந்தவர், ஆனால், திருமணம் முடித்த ஒருவருடன் ஏற்பட பேஸ்புக் காதலால், தலையிழந்து முண்டம் கண்டம் துண்டங்களாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். தான் நேசித்த பெண்ணை இதயம் இல்லாமல் யாராவது ...

Read More »

ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், ...

Read More »

வடக்கில் நேற்று நால்வருக்கு கொவிட்-19 தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்தவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ...

Read More »

அமெரிக்காவின் ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருது

இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன், தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து உரையாற்றவுள்ளார். உலகெங்கிலும் பெண்களின் அமைதி, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், வலுவூட்டல் போன்றவற்றுக் காக போராட்டத்தில் தனித்துவமாக அபாயத்தையும் பொருட்படுத்தாமல் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய ...

Read More »