குமரன்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக நிசாந்த டி சொய்ஸா

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக சிரேஷ்ட காவல் துறை  அத்தியட்சர்(SSP) நிசாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல் துறை   மா அதிபர் நுவான் வெதசிங்க மேல் மாகாணத்துக்கான பதில் பிரதி காவல் துறை  மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

Read More »

நியுசிலாந்து பொதுத்தேர்தல்- ஜசின்டா ஆர்டெனின் கட்சி முன்னிலையில்

நியுசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசின்டாஆர்டெனின் தொழில்கட்சி வெளியாகியுள்ள ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. ஜசின்டா ஆர்டெனின் மூன்றுவருட பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகத்தொடங்கியுள்ளன. இதுவரை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி பிரதமரின் தொழில்கட்சி 50வீத வாக்குகளை பெற்றுள்ளது.எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 25 வீத வாக்குகளை பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் பிரதமருக்கு சாதகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதமர் ஜசின்டா ஆர்டெனிற்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்விகளும் நியுசிலாந்தில் காணப்படுகின்றன.

Read More »

பவித்ராவை நம்பி இருக்கிறேன் – அக்‌ஷரா ஹாசன்

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு படத்தில் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ஹாசன், பவித்ராவை நம்பி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’. நடிகர் விஜய் சேதுபதி பர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீசரை வெளியிட, கமல்ஹாசன் சமீபத்தில் இதன் டிரைலரை வெளியிட்டார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ஹாசன், இப்படம் பற்றி கூறும்போது, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு திரைப்படம் போல் தமிழில் இதுவரை வந்தது ...

Read More »

உள்ளங்கைப் புண்ணுக்கு இதயத்தில் சத்திரசிகிச்சை

இன்று இந்த நிலைமைக்குச் சென்றிருக்காது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: “இலங்கையின் வெளிவிவகார கொள்கை என்பது இப்பொழுது பாரிய விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் நாடு அல்லோல கல்லோலப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், இருபத்தியொருபேர் கொண்ட சீன உயர்மட்டக் குழுவினரின் வருகையும் இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக்பொம்பியோ வரவிருப்பதும் இதற்கு முன்னர் இந்திய – இலங்கை பிரதமர்களுக்கிடையிலான ...

Read More »

சுவாச துளிகள் மூலம் குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குளிர்காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வரும் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘நானோ லெட்டர்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதுபற்றி பேராசிரியர் யானிங் ஜூ மற்றும் ...

Read More »

மருத்துவரின் மாஸ்கை கழற்றும் பிறந்த குழந்தை

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை குழந்தையின் புதிய வரவு உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் ...

Read More »

திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா

திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியொருவரை அமெரிக்கா நியமித்தமை குறித்து சீனா கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது. திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியாக ஜனநாயகம் மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்காக உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் டெஸ்டிரோ செயற்படுவார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ அறிவித்துள்ளார். 2017 முதல் குறிப்பிட்ட பதவிக்கு எவரும் நியமிக்கப்படாமலிருந்த நிலையிலேயே புதிய பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. திபெத்த் ஸ்திரமிழக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கின்றது என சீனா தெரிவித்துள்ளது. ...

Read More »

தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் நாளை யாழ்ப்பாணத்தில் கூடுகின்றன

தியாகி திலீபனின் நினைவேந்தலுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா விடுத்திருக்கின்றார். “தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20 ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்” என மாவை சேனாதிராஜா தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார். “ஏற்கனவே நாம் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். ஒரு உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருக்கின்றோம். இந்த நிலையில் ...

Read More »

கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இதனால் நோய்தொற்று ஏற்படாத மாவட்டமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் ...

Read More »

முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி…

முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதியின் 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார். இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், ...

Read More »