குமரன்

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – 17 தமிழ் படங்கள் திரையிட தேர்வு

8 நாட்கள் நடைபெறும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 53 நாடுகளை சேர்ந்த 91 படங்கள் திரையிடப்படுகிறது. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, ஐ.சி.ஏ.எப். பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பரை சேர்ந்த காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் ...

Read More »

பளையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்க நடவடிக்கை

பளைப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளைச் சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கையை கோத்தபாய அரசு மேற்கொள்கிறது. இதற்காகவே, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- பளைப் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது. அந்தப் பகுதியில் சீன நிறுவனத்துக்கும், ...

Read More »

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்குக!

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடத்தலாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துமாறுகோரி, அந் நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு நேற்று ...

Read More »

ஆளும் கட்சியின் உட்பூசல்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதமர் அண்மையில் அத்தடையை நீக்கும் வகையில், ஒரு வர்த்தமானி ...

Read More »

கடும் பனிப்பொழிவால் திணறும் டெக்சாஸ்… மின்சாரம் இன்றி 34 லட்சம் மக்கள் தவிப்பு

டெக்சாஸ் மாநிலத்தில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன. குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, கடந்த ...

Read More »

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் ரபேல் நடால் தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதியில் கடும் போராட்டத்திற்குப்பின் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை ரபெல் நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் நடால் எப்படியும் வெற்றி ...

Read More »

கேள்வி எழுப்பிய சுவிற்சர்லாந்து தூதுவர் – விக்னேஸ்வரன் வழங்கிய பதில் என்ன?

அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளே தற்போது தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகதமிழர்கள் கத்தோலிக்கர்களை ஐக்கியப்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகள் தொடரும் வரை இந்த ஐக்கியப்படுதலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலருடனான சந்திப்பின்போது விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.  திய சுவிஸ் ...

Read More »

திருகோணமலை துறைமுகம் யாருக்கு?

யாழ் தீவுகளில் சீன மின் திட்டம் தொடர்வதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது. இவ்விடயத்தில் நிச்சயம் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும். இலங்கை மீது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு அல்லது வேறொரு நாட்டுக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் ...

Read More »

கயல் ஆனந்தியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

கமலி பிரம் நடுகாவேரி படத்தை தொடர்ந்து கயல் ஆனந்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் ...

Read More »

எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை – அர்ஜுன்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன், எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் அர்ஜுன். இவருடைய தங்கை மகன் துருவ சார்ஜா நடிப்பில் உருவாக்கி இருக்கும் செம திமிரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அர்ஜுனிடம் தேசபக்தி உள்ள நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அர்ஜுன், சினிமாவில் ஒருநாள் முதல்வர் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் அது போல் செய்ய ...

Read More »