குமரன்

கொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019-ம் ஆண்டிலேயே கணித்து கூறியவர். இவரது பெயர், அபிக்யா ஆனந்த். கர்நாடகாவைச் சேர்ந்தவர். பிறந்தது, 2006-ம் ஆண்டு. இவரது தந்தை ஆனந்த் ராமசுப்ரமணியன். தாய் அனு ஆனந்த். ...

Read More »

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சமூகத்தில் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கலாமென, அச்சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இணைந்திருப்பார்களானால், அதனால் பாரிய நோய் தொற்று ஏற்படக்கூடுமென, சங்கத்தின் பிரதித் தலைவர் சாரத கன்னங்கர அதிர்ச்சி தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையிட்டு, மக்கள் முன்னரைவிட சுகாதார விதிமுறைகளை அதிகளவில் பின்பற்ற வேண்டுமென, அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்

பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார். குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த ...

Read More »

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது

கொரோனா வைரசானது பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் அவரது மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்களின் தலைவரான அந்தோனி பவுசி கூறியதாவது:- இருமல் மற்றும் தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட வைரஸ் உண்மையில் பரவக்கூடும் என்ற சில சமீபத்திய தகவல்கள் ...

Read More »

மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரசை அழிக்க ஆய்வு!

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ...

Read More »

மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்!

மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த இரவு பகலாக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரை பாராட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ...

Read More »

கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது? –

வூஹான் வைத்தியர் விளக்கம் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய சீன நகரமான வூஹான் இருமாதகால முடக்கத்திற்குப் பிறகு மெதுமெதுவாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. வூஹானிலும், அதை உள்ளடக்கிய ஹூபே ;மாகாணத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு எவருக்குமே தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானோருக்குத் தினமும் அந்நகரில் தொற்று ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இத்தகையதொரு மீட்சிநிலை நினைத்துப் பார்க்க முடியாததாகும் அந்த நகரில் கொவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டவர் ...

Read More »

ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்!

பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க ...

Read More »

சிறு வயதிலேயே காய்ச்சலும் சில வைரஸ்கள் தாக்குவதும் நல்லது… ஏன்?

உலகை உலுக்கிய கொள்ளைநோய்களில் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு வரலாற்றிலேயே முக்கிய இடம் உண்டு. முதலாம் உலகப் போர் முடிவில் அதுவும் தன் பங்குக்குப் பல கோடி உயிர்களைக் காவுவாங்கியது. போர் நடைபெறாத பசிபிக் தீவுகள், ஆர்க்டிக் துருவப் பகுதியின் கிராமங்களில்கூட காய்ச்சல் கோரத் தாண்டவம் ஆடியது. அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் காய்ச்சல் பீடித்தது. ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலில் இறந்தனர். முதலாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட மூன்று மடங்கு மக்கள் இந்தக் காய்ச்சலில் இறந்தனர். 1918 காய்ச்சலின் முக்கியத்துவம் என்னவென்றால், ...

Read More »

மதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம் சுமத்துவது தவறு: அமெரிக்கா வேதனை

கரோனா வைரஸை மதச் சிறுபான்மையினர்தான் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானது. இந்தக் குற்றம் சாட்டுதலால் உண்மையில் அதற்கு அனுமதிக்கும் அரசு உலகத்தால் பின்னோக்கித் தள்ளளப்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக் வேதனை தெரிவித்துள்ளார். டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின், அதற்கு மதரீதியாக சிலர் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வரும் சூழலில் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் ...

Read More »