குமரன்

இருமல், மூச்சு திணறல் உள்ள ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

மூச்சு திணறல், தொடர் இருமல், போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். மூச்சு திணறல், தொடர் இருமல், போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது. மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள ...

Read More »

மனிதாபிமான ரீதியில் அனுமதி வழங்கியது அவுஸ்திரேலியா!

அமெரிக்காவில் உயிரிழந்த மகனின் உடலை பார்க்க முடியாமல் தவித்த தாய் அமெரிக்காவில் உயிரிழந்த 20 வயது மகனின் இறுதிசடங்கில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான அனுமதியை மனிதாபிமான அடிப்படையில் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்குண்டுள்ள தாயார் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்காவில் கடந்தவாரம் இராணுவபயிற்சியின் போது திடீர்என மரணித்த லியோன் சியுபொலி என்ற இளைஞனின் தாயாரே இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்க இராணுவத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் இணைந்துகொண்ட லியோன் வோசிங்டனில் 12 ம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது தாயாரும் ...

Read More »

அமலாபாலின் திருமணம் பற்றிய பதிவு

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலாபால், திருமணம் பற்றி பதிவு செய்துள்ளார். நடிகை அமலா பாலுக்கு ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார். மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர ...

Read More »

இலங்கை  ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு!

இலங்கை  ரீதியில் இன்று (25) மற்றும் நாளை (26) ஆகிய இரு தினங்கள்  முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நேற்று (24) இரவு 8.00 முதல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தவிற ஏனைய 18 மாவட்டங்களில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும், இரவு 8.00 மணி தொடக்கம் காலை 5.00 ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி உறுப்பினர் கடற்கரையில் சடலமாக மீட்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் செந்துாரன் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். தொண்டமனாறு -மயிலியதனை மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று இரவு அனாதரவாக கிடந்த அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து காவல் துறை, மற்றும் உறவினர்கள், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தீவிர தேடுதலில் இறங்கியிருந்தனர். ஆனாலும் அவர் மீட்கப்படாத நிலையில் இன்று அதிகாலை தொண்டமனாறு கடற்கரையில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More »

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக உயிர்நுட்பவியல் முன்னாள் ஆய்வாளராக என்ன சொல்கிறார்?

கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளால் உருவாகும் காய்ச்சலுக்கு கபசுர குடிநீர் மற்றும் தொந்தசுர குடிநீர் ஆகிய இரண்டு மருந்துகள் பயன்படும் என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உயிர்நுட்பவியல் ஆய்வாளராக இருந்து, தற்போது தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவம், மூலிகைகள் குறித்த நவீன ஆய்வுகளை மேற்கொண்டு, சஞ்சீவ் உயிர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவருமான விஞ்ஞானி எம்.எஸ்.ராமசாமி, சித்தா டாக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பிச்சைகுமார் குழுவினர் கொரோனாவுக்கு எதிரான கபசுர மூலிகைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு ...

Read More »

ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன?

ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பலரும் பிறரிடம் இருந்து ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தற்போது அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் டிஷ்யூ பேப்பர், முகக் கவசம், ரூபாய் நோட்டுகள் ஆகியவை உள்ளன. இவற்றில், முகக் கவசத்தில் கொரோனா வைரஸ் 7 ...

Read More »

சிறிலங்காவில் இளம் தாய்க்கு கொரோனா – சிசு பரிதாப மரணம்!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் டி சொய்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக அவரது சிசு உயிரிழந்துள்ளது.சிசுவின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாது” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார் இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் ...

Read More »

மக்கள் விழிப்படைந்துள்ளனர்- கொரோனா வைரஸ் குறித்து வுகான் அதிகாரிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்

ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் 65 வயது ஹ_ அய்ஜென் தனது நகரில் புதிய கொரோhனா வைரஸ் உருவாகியுள்ளது குறித்து அறிந்தார்.அவர் அது குறித்து கவலையடையவில்லை அதுமனிதர்கள் மத்தியில் பரவாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக அவர் தனது நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன்,மாத இறுதியில் வரவுள்ள புதுவருடத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார். வுகானில் முடக்கநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அவர் நிமோனியா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் மருத்துவமனைக்காகவும், சிகிச்சைக்காகவும் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவரிற்கு வைரஸ் பாதிப்புள்ளதா என்பதற்கான மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. ஆனால் மருத்துவபரிசோதனைகளின் போது ...

Read More »

இலங்கையின் முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது!

இலங்கை அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும்,சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் சட்டத்தரணிகளை தொடர்புகொள்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்விடுத்துள்ளது. கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான கொள்கையொன்றை அரசாங்கம் வெளியிட்ட பின்னர் இடம்பெற்றுள்ள கைதுகள் இலங்கையின் முஸ்லீம் சிறுபான்மையினத்தவரின் ; பாதுகாப்பு குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற மிகவும் கொடுரமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளிற்கு காரணமானவர்களை நீதி விசாரணைகளிற்கு உட்படுத்தவேண்டும் எனினும் கைதுகள் சட்டபூர்வமானவையாக காணப்படவேண்டும் என மனித ...

Read More »