குமரன்

வாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கியூ ஆர் கோட் அம்சத்தினை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவின் ப்ரோஃபைல் பகுதியில் இயக்க முடியும். கியூஆர் கோடுகளை நண்பர்களுக்கு அனுப்பி, உங்களது நம்பரை பகிர்ந்து கொள்ள முடியும். கியூஆர் கோடினை ...

Read More »

தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்!

நடிகை ஜோதிகா, வடக்கிலிருந்து வந்தாலும் அதை கச்சிதமாக செய்துள்ளதாக நடிகை ராதிகா டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டி‌ஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி ...

Read More »

காதல் கைகூடியது எப்படி?

மிஹீகா பஜாஜ் உடனான காதல் குறித்து நடிகர் ராணா டகுபதி சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார் .ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ...

Read More »

கிழக்கில் தொல்லியல் ஆய்வு… சிங்கள பௌத்த நாடாக மாற்றத் திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். அவர் மட்டக்களப்பிலுள்ள அவரது வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு ...

Read More »

யாழில் காவல் துறை உப பரிசோதகர் மீது வாள் வெட்டு

ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உபகாவல் துறை பரிசோதகர் வாள் வெட்டுக்கு இலக்காகி கையில் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது. சங்கானையைச் சேர்ந்த உப காவல் துறை  பரிசோதகரே (வயது 35) வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். கீரிமலைப் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை நடத்த உப ...

Read More »

யாழ்ப்பாணத்தில் இராணுவம் மீது தாக்குதல் – மூவர் கைது!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் கோப்பாய் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் காவல் துறையினர்  தெரிவித்தனர். அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் ...

Read More »

சமூக விலகலைக் கடைப்பிடித்து வளைகுடா நாடுகளில் இன்று ரமலான்

புனித ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்புக் காலம் முடிந்து வானில் பிறை காணப்பட்டதையடுத்து வளைகுடா நாடுகள் அனைத்திலும் இன்று புனித ரமலான் பண்டிகை தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்துக் கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவரும் உற்சாகமாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் திகதி முதல் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் நோன்புக் காலம் முடிந்து நேற்று பிறை தென்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு அறிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ...

Read More »

ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள்

அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று பெரும் சுகாதார சிக்கலாகவும் அதன் தொடர்ச்சியாக பயணத் தடைகளும் நடைமுறையில் உள்ள இச்சூழலில், மனுஸ்தீவில் (பப்பு நியூ கினியா) வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 35 பேர் அமெரிக்காவுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 7 அகதிகளும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் தற்போது அமெரிக்காவுக்கு 42 அகதிகள் பயணமாகியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ...

Read More »

தலைவர் பிரபாகரனும் பூரியும்!

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார்.இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் ...

Read More »

வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷெரின் வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த பேசியிருக்கிறார். தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ”திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம், ...

Read More »