குமரன்

ஜோர்ஜ் புளொய்டின் கொலையும் கலவரங்களும் அமெரிக்காவில் ஆழமாக வேர்விட்ட இனவெறியின் வெளிப்பாடு

மிகவும் மிருகத்தனமான முறையில் 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து நாடு பூராகவும் பரவியிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களும் ‘உலகின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயகம்’ என்று தன்னைக் கூறிக்கொள்கின்றதும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்கா பூராகவும் மனித உரிமைகளின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்கின்ற நாடான அமெரிக்காவில் இனவெறி எந்தளவு தூரத்திற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. அமெரிக்க நடிகர் ஜக் ஹீலியும், புலனாய்வுப் பத்திரிகையாளர் டியோன் சியேஸியும் மே 30 நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ...

Read More »

பார்த்திருக்கவே கறுப்பு நிறமாகிய உடல்! கொரோனாவால் மரணித்த வைத்திய நிபுணர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீன வைத்தியர் ஒருவருக்கு உடல் முழுவதும் நிறம் மாறிக் கொண்டே வந்தது. கறுப்பு நிறமாக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி வைத்தியர் இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீனாவில் முன்னணி வைத்தியரான ஹூ வெய்பெங் ட்னி என்ற பெயருடைய வைத்தியர், சிறுநீரக வைத்திய நிபுணராவார். குறித்த பகுதியில் பிரபலமான வைத்தியர் இவர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, இவருடன் வேலை பார்த்த மற்றொரு வைத்தியரான யி-பன் என்பவருக்கும் தொற்று ...

Read More »

கரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்

கரோனா அச்சுறுத்தலால் 14 நாட்கள் தனிமையில் இருந்ததாகவும், தற்போது அது முடிவடைந்ததாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர். போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி கபூர் மட்டும் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் தனது மகளுடன் வீட்டிலிருந்தார் போனி கபூர். அப்போது அவருடன் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ...

Read More »

தாயுடன் பேச முருகன், நளினியை மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதிக்க முடியாதா?-

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன், வெளிநாட்டில் வாழும் அவர் தாயுடன் தொலைபேசி மூலமாக பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் வசிக்கும் தங்கையுடன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச முருகனுக்கும், நளினிக்கும் அனுமதியளிக்க உத்தரவிடக் ...

Read More »

இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்

மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும். இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் ...

Read More »

மீனவருடன் 10 வருடமாக நட்புக்கொண்டுள்ள கொக்கு !

வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார். அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது. நான் இக்குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து வருகின்றேன். கடந்த பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது. குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து ...

Read More »

ஞானசார தேரர் வரலாற்று அறிவின்றி கருத்து வெளியிடுவதை நிறுத்தவேண்டும்!

பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார். அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். வட,கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல இலங்கை முழுவதும் பௌத்த பூமியாகும். வடகிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை ஞானசாரதேரர் தெரிவித்திருந்தார். ஞானசார தேரரின் குறித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ரவிகரனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read More »

ரோஜா 2-ம் பாகத்தை இயக்க மணிரத்னம் திட்டம்?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ரோஜா படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள். ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் ...

Read More »

ஜனநாயக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு

ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்ற நாட்டின் ஜனநாயகத் தன்மையைக் கொண்ட பெயருக்கும், அதன் ஜனநாயகப் பாரம்பரிய பெருமைக்கும் ஊறு விளைவிக்காத வகையில் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நாடாளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானி அறிவிப்பையும், ஜுன் 20 ஆம் திகதி தேர்தலுக்கான அறிவிப்பையும் அடிப்படை உரிமை மீறல் என்ற வகையில் சவாலுக்கு உட்படுத்திய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஒரு சாராரும் இல்லை இல்லை இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்தியுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம் என டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 ...

Read More »