குமரன்

யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் மரணம்

கொரோனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்த கொண்டு வரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள்  யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் எம்.அ.நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய கடந்த 23 ஆம் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று இரவு அவர் ...

Read More »

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல்நிலை நிலவரம் என்ன?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் வெளியி்ட்டுள்ளார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக ...

Read More »

தெரு நாய்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் ராஷ்மிகா

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தெரு நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து வருகிறார். தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள நான்கைந்து தெருக்களுக்கு தினமும் செல்கிறார். உடன் உணவுகளுடன் அவரது உதவியாளர்களும் செல்கிறார்கள். தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு ராஷ்மிகா உணவு கொடுக்கிறார். இது பற்றி அவர் சொல்லும்போது, ‘இந்த ஊரடங்கு சமயத்தில் வாயில்லாத ஜீவன்கள் அதிக சிரமம் படுகிறார்கள். அதை அவர்களால் சொல்ல முடியாது. நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். ...

Read More »

தமிழ் கட்சிகள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றனவா?

சீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. ஆனாலும் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய நெருக்கடிநிலை காணப்படுவதும் உண்மைதான். அரசியலைப்பின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறாயின் யூன் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்பதாக தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் கிடைக்கும் தகவல்களின்படி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவே கூறப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில்தான் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ...

Read More »

இலங்கையில் தொற்றாளர்கள் 368

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.

Read More »

மீண்டும் வார்னர், ஸ்மித்: வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா. ந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளைாடும்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக விளையாடாமல் இருந்தனர். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றியது. இந்நிலையில் வருகிற டிசம்பர்-ஜனவரியில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் ...

Read More »

கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை!

சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:- தஞ்சை ...

Read More »

மக்களின் இறையாண்மையே இறுதி இலக்கு!

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்ற உறுப்பினர்கள் மூவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் ஆணைக்குழு அவசியமற்றதாகும். நாம் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதே எமது ஒரே இலக்காகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலும், உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாலும் ஒரே நோக்கில் ஆணைக்குழுவினால் பயணிக்க முடியாமலிப்பதாகக் கூறப்படுகின்றமை உண்மையா என்று ஊடகவியலாளர்களும் அரசியல் ஆர்வலர்களும் கேள்வியெழுப்புவதாகக் ...

Read More »

அவுஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஊதுகுழல்கள்!

உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை அமெரிக்காவின் ஊதுகுழல் என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதரகம் வர்ணித்துள்ளது. சீனா கொவிட் 19 குறித்து அதிகளவு வெளிப்படைதன்மையுடன் செயற்படவேண்டும், என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கடந்த வாரம் வெளியிட்டுள்ள கருத்து குறித்தே சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை தெரியப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பீட்டர் டட்டன் எனினும் அந்த ஆவணத்தை பார்வையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா வைரசினால் உயிரிழந்த அவுஸ்திரேலியர்களிற்கு பதில் அவசியம் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ...

Read More »

கிராமத்து பெண் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் ராஷ்மிகா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, தனது அடுத்த படத்திற்காக பயிற்சி எடுத்து வருகிறாராம். நடிகர் அல்லுஅர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். அவருக்கு கிராமத்து பெண் வேடம். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து ...

Read More »