உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை அமெரிக்காவின் ஊதுகுழல் என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதரகம் வர்ணித்துள்ளது.
சீனா கொவிட் 19 குறித்து அதிகளவு வெளிப்படைதன்மையுடன் செயற்படவேண்டும், என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கடந்த வாரம் வெளியிட்டுள்ள கருத்து குறித்தே சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை தெரியப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பீட்டர் டட்டன் எனினும் அந்த ஆவணத்தை பார்வையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த அவுஸ்திரேலியர்களிற்கு பதில் அவசியம் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எங்களுடைய இந்த கேள்வி அளவுக்கதிகமானது இல்லை ,இது நிச்சயமான கேள்விஇதன் மூலம் மக்களிற்கு என்ன நடந்தது என்ற தெளி ஏற்படும் என தெரிவித்திருந்தது பீட்டர் டட்டன் இது மீண்டும் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
பீட்டர் டட்டனின் கருத்தினை சாடியுள்ள சீனா அவுஸ்திரேலிய அதிகாரிகளை அமெரிக்காவின் ஊதுகுழல் போல செயற்படுவதை நிறுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பீட்டர் டட்டன் குறிப்பிட்ட ஆவணங்களை பார்வையிடாத நிலையில் ஏன் அவரால் சீனாவை வெளிப்படை தன்மையுடன் செயற்படுமாறு கேட்பதை தாமதித்திருக்க முடியாது என சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு எதிரான தகவல் வைரசினை சமீப நாட்களில் உயர் அதிகாரிகள் உட்பட அமெரிக்காவில் உள்ள சிலர் பரப்பி வருகின்றனர் என்ப துநன்கு அறியப்பட்ட விடயம் என சீன தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளை சுமத்தி, சீனாவை தாக்குவதன் மூலம் தங்கள் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதே என அவர் குறிப்பிட்டுள்ளார்