அவுஸ்திரேலியாவில், பிரிஸ்பேன் நகரை அண்மித்த வீதியொன்றில் திடீரென காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை சுமார் ; 8.00 மணியளவிலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐந்து பேர் காருக்குள் இருந்துள்ள நிலையிலேயே குறித்தக் கார் தீப்பற்றியுள்ளது. இந்நிலையில் காருக்குள் இருந்த பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் காரை நோக்கி ஓடி சென்று காருக்குள்ளிருந்த குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அதன்போது, அவன் தான் என் மீது மண்ணெண்ணையை ஊற்றினான் என குறித்தப் பெண் கத்தியதாக அப்பெண்ணை மீட்டவர் தெரிவித்துள்ளார். மேலும், ...
Read More »குமரன்
கரோனா வைரஸ் பாதிப்பு: சீன இயக்குநர் குடும்பத்தோடு பலி !
மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 காய்ச்சல் கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களில் ஹுபெய் மாகாணம் மட்டுமன்றி சீனா முழுவதும் இந்தக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2004 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் தகவலின்படி சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனை திரும்பியுள்ளனர். ...
Read More »தமிழைக் காத்த தமிழ் தாத்தா!
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா., பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார். இன்று (பிப்ரவரி 19-ந் திகதி) தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் பிறந்த நாள். தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தார். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சில் கொண்டு வந்தார். பிற்காலத்தில் தமிழின் தூதுவராக இருந்து சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்து ‘தமிழ் தாத்தா’ என்று பட்டப்பெயர் பெற்றார். ...
Read More »ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த நடிகை !
நடிகை கேத்தரின் தெரசா, ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. கேத்தரின் தெரசா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக சீனியர் தெலுங்கு நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படத்தில் கேத்ரின் நடிக்க மறுத்துவிட்டதாக பின்னர் தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி யாரும் உறுதிபடுத்தவில்லை. ...
Read More »லாரியஸ் விருதை வென்றார் சச்சின்!
விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இதில் 2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் ...
Read More »கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை!
நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக ...
Read More »வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும்!
சிறிலங்கா அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் ...
Read More »படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது – வசந்தபாலன்
வெயில், அங்காடித்தெரு படங்களை இயக்கிய வசந்த பாலன், ஒரு படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். அதற்கு ஒரு உதாரணம் என்றால் அவரது அங்காடித் தெரு படத்தை கூறலாம். இவர் சமீபத்தில் ஜெயில் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார், அப்படத்தை வெளியிட முடியாமல் வசந்தபாலன் திணறி வருவதாக தெரிகிறது. அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும். ஷூட்டிங் ...
Read More »ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து!
பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கலந்து கொண்டு ராக்கிங்கை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்து சிந்தித்தார்கள். அதன் போது ஒரு மூன்றாம் வருட மாணவன் எழுந்து ஆசிரியர்களை பார்த்து பின்வருமாறு கேட்டிருக்கிறார் “உங்களுடைய காலத்தில் ராக்கிங் செய்யாத யாராவது ஒருவர் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று. அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஓர் இளம் விரிவுரையாளரைத் தவிர வேறு யாருமே அந்த மாணவருக்கு ...
Read More »இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் சொல்கிறார்!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. இதற்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு போட்டியை டே-நைட் டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு இந்திய ...
Read More »