மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நடனத்தை பார்த்து பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு உரியத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்கள். தமிழில் மட்டும்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுப்பது என்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் ...
Read More »குமரன்
அரசாங்கத்தை விமர்சித்தவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார்
சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே விவசாய அமைச்சில் அவர் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் – தேசிய விவசாயக் கொள்கையை உருவாக்க நிபுணர் குழு, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம், சிறு உடமையாளர் விவசாயக் கூட்டுத் திட்டம் ஆகியவற்றில் வகித்த பதவிகளில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவர் வகித்த பதவிகளில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »யாழ். குருநகரில் சுமந்திரனுக்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம்
யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இழுவை மடித் தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடித் தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்கள் அடிமடித் தொழில் ...
Read More »தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது.இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது.அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது.2001, 2004, 2010, 2015, மற்றும் 2020 பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பு இரட்டை இலக்கத்தில் ...
Read More »ஆஸ்திரேலிய தடுப்பில் கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகதி
தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னின் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கணக்குப்படி, அத்தடுப்பில் உள்ள 15 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More »கூட்டமைப்பு: இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும்
2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 பேரில் ஐம்பது வீதமானோர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். அன்றுஇ 633,654 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு 2009க்குப் பின்னர் கதிரை அரசியலுக்கு மாறி கடந்த வருடத் தேர்தலில் 327,168 வாக்குகள் மட்டும் பெற்று பத்து ஆசனங்களுடன் சரிவு நிலைக்கு வந்துள்ளது. ‘கட்டாக்காலி’ அரசியலால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாக கூட்டமைப்பு ஆகிவிட்டது. ...
Read More »கோட்டாபய ஒப்புக்கொள்ளாவிட்டால்? அடுத்த முடிவு தயார்
கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொள்ளாவிட்டால் மக்களிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து ...
Read More »6 இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்
இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
Read More »நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் பிரபலமான பால் வாக்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைந்தார். மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், ...
Read More »குழந்தைக்கு வீட்டுப்பாடம் வழங்க சீனாவில் தடை
சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இப்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக சிறு குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்ய முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளார்கள். அவர்கள் விளையாடுவதற்கு, மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கு ...
Read More »