குமரன்

இரட்டைக்குழல் துப்பாக்கி

எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம் என்ற அரசியல் போக்கை ராஜபக்ஷக்கள் ஆழமாகவம் அகலமாகவும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியபோது, இந்த அரசியல் உத்தி அவர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுத்திருந்தது. யுத்தத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதனை அவர்கள் படிப்படியாகக் கடைப்பிடித்து வருவது குறித்து, இந்தப் பத்தியாளரின் எழுத்துக்கள் ஏற்கனவே  வெளிப்படுத்தி இருந்தன. இப்போது அது நிதர்சனமாகி இருக்கின்றது. வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்த ராஜபக்ஷக்கள் இந்த நாட்டின் அரசியல் கதாநாயகர்களாக உருவாகி இருந்தார்கள். யுத்த வெற்றி ...

Read More »

சூர்யா செய்த சமையல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, லாக்டவுனில் வீட்டில் சமையல் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பலரும் தங்கள் ...

Read More »

சூம் தொழில்நுட்பத்தில் தகவல்கள் திருடப்படலாம்

தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் நவீன சூம் தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் ; (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு எச்சரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தவாறே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெருமளவான முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என்பன தமது கூட்டங்களையும் கல்வி நடவடிக்கைகளையும் இதனூடாகவே நடத்துகின்றன. இந்நிலையில் இதுகுறித்து இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

Read More »

நேரலையில் கமலுடன் கலந்துரையாவுள்ள ஏ.ஆர்.ரகுமான்

கமல்ஹாசனுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளம் வாயிலாக நேரலையில் கலந்துரையாட உள்ளார். கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 11-ந் திகதி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்,  ...

Read More »

எல்லை பிரச்சினை தீர்வு காண இந்தியா – சீனா சம்மதம்

 எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதித்து இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அதிகாரி கூறினார். லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுமாகவும், ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருந்ததாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ ராணுவ மற்றும் தூதரக ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை ...

Read More »

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் – வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் வருமாறு, மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை மூப்பு மற்றும் கல்வித்தராதரங்களுக்கு ஏற்ப ஸ்தாபனக் கோவை விதிகளுக்கு உட்பட்ட வகையில் இடம் பெறும். நியமனம் பெற்ற ஒரு மருத்துவரின் இடமாற்றம் அவரது சுயவிருப்பின் பேரில் அல்லது ஒழுக்காற்று விதிகளுக்கு அமைய ...

Read More »

இங்கிலாந்தில் தனிமைப்படுத்துவதில் புதிய விதிமுறைகள் அமல்

 இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வருகிற இங்கிலாந்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்த தொற்றின் பாதிப்பு உள்ளது. ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் அங்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அங்கு தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி அங்கு செல்கிற இங்கிலாந்துவாசிகள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அயர்லாந்து, சேனல் தீவு, மனித தீவுவாசிகளுக்கு ...

Read More »

ஜெயித்தது நியூசிலாந்து – இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை

கொரோனாவை ஜெயித்து காட்டி இருக்கும் நியூசிலாந்தில் இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆசைதான், கொலைகார கொரோனா வைரசுக்கு விடை கொடுத்து விட வேண்டும் என்று. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ், ‘விட்டேனா பார்’ என்கிற அளவுக்கு, கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து பரவி வருகிறது. ஆனால் கொரோனாவை ஜெயித்து காட்டி இருக்கிறது, நியூசிலாந்து. ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் ...

Read More »

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கௌரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தெரிவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கௌரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ...

Read More »

அமிதாப் பச்சனுக்காக காத்திருக்கும் பார்த்திபன்

பாலிவுட் உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார். புதிய பாதை படம் மூலம் இயக்குனரான பார்த்திபன் தொடர்ந்து பல படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த வருடம் அவர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பட விழாக்களில் திரையிட்டும் பாராட்டுகள் பெற்றது.  இந்த நிலையில் தனது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் தயாராகி வருகிறார். இந்த படம் 1999-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. பார்த்திபனே ...

Read More »