கமல்ஹாசனுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளம் வாயிலாக நேரலையில் கலந்துரையாட உள்ளார்.
கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜூன் 11-ந் திகதி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சமூக வலைத்தளம் வாயிலாக உரையாட உள்ளனர். தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இந்த உரையாடல் டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. இந்த உரையாடலின்போது தலைவன் இருக்கின்றான் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal