குமரன்

கிட்டுபூங்காவின் முகப்பிற்கு தீ வைத்த விசமிகள்

இனந்தெரியாத நபர்கள் கிட்டுபூங்காவின் முகப்பிற்கு தீ வைத்ததால் அது எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிட்டுப்பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிவதை கண்டதும் தீயணைப்பு பிரிவினருக்கு உடனடியாக தாங்கள் அறிவித்த போதிலும் அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு வரவில்லை இதனால் முகப்பு தீக்கிரையாவதை தடுக்க முடியவில்லை என முகப்பு தீப்பற்றி எரிவதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது

கால்வாயின் கரைகளில் மோதி தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் ...

Read More »

தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் பல தனி நபர்களையும் கறுப்பு பட்டியலிட்டது சிறிலங்கா

தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் பல தனி நபர்களையும் கறுப்பு பட்டியலிட்டது சிறிலங்கா  ! பெயர்கள் அடங்கிய வர்ததமானி வெளியானது ! உலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பலரின் பெயர்களையும் கறுப்புப் பட்டியலில் இணைத்து சிறிலங்கா அரசாங்கம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக சிறிலங்கா  அரசாங்கம் கறுப்புப் பட்டியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் ...

Read More »

கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை- முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்து

ஒருவேளை துரதிருஷ்டவசமாக பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள் பெரும் துன்பத்தை கருத்தில் கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து வருகிறது. பெண்கள் குழந்தைகளை பெறுவதைத் தவிர மற்றும் சில விஷயங்களிலும் வேலைக்கு வரும்போது கஷ்டப்படும் நிலை உள்ளது. கருவுற்ற சில வாரங்களில் ...

Read More »

நீர்வை பொன்னையன் குறித்து…….

நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பற்றிய மதிப்பீடுகள் பலவடிவங்களில் வெளிப்பட்டன. அவரது இறுக்கமான கருத்தியல் நிலைப்பாடு காரணமாக அவரைப் பலரும் நெருங்க இயலாதவரெனக் கண்டபோதிலும் சமூக நலநாட்டம்மிக்க பக்கத்தில் எவ்வகையிலும் புறக்கணித்துவிட முடியாதவர் என்ற வகையில் நீர்வை கவனிப்புக்கு உரியவராக இருந்து வந்தார்; ‘இலங்கா இரத்தினா’ விருது வரை அவர் அடையாளப்படுத்தபட வேண்டியவராக இருந்துள்ளார். தனக்கான அரசியல் இலக்கியத் தளத்தில் சமரசத்துக்கு இடமளிக்காதவர் ...

Read More »

சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு இன்றியமையாதது!

நீதிபதிகளை பதவி விலக்கும் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் அரசியலமைப்பின் ; 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் நியமனம் மற்றும் அவர்களை பதவி விலக்குதல் ஆகியவற்றின் போது உரிய சட்டதிட்டங்களும் வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 2021/2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கும் நிகழ்வும் முதலாவது கூட்டமும் நேற்று சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...

Read More »

தீர்மானம்! அறிக்கைகள்! தலையை சுற்றுகிறது!

முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குச் சென்றபின்னர் போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்கள், வாய்மூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் தமிழர் தரப்பால் பல நாடுகளில் சேகரிக்கப்பட்டன. இன்னும் தொகுக்க வேண்டியவை நிறைய உண்டு. இவற்றைத் தாமதமின்றிச் சேகரித்து மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதனைச் செய்யத் தவறின் 46:1 அர்த்தமில்லாது போய்விடும். 2022 செப்டம்பரில் ஜெனிவாக் கதவும் மூடும் நிலை ஏற்படலாம். ஒரு மாதத்துக்குள் மூன்று நான்கு சிறுசிறு திருத்தங்களுக்குட்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்த மாதம் 23ம் திகதி நிறைவேற்றப்பட்டது. பேரவையின் ...

Read More »

உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்தில்லை

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் இயற்கை எய்தினார். ...

Read More »

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ...

Read More »

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு

சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. 2-வது அலை மற்றும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த ...

Read More »