வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி- வத்ராஜன் பகுதியிலுள்ள தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தை அமைப்பதற்கான செலவு, தனிநபர் ஒருவரின் நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மைதானத்தின் முன்பகுதியில், சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் சீன தேசிய கொடியில் காணப்படுகின்ற ராகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தற்போது மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »குமரன்
‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்’
தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் ...
Read More »மகாசங்கத்தினர் பௌத்த சாசனத்திற்கு முரணாக செயற்படுகின்றனர்!
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து மகாசங்கத்தினர் முதலில் தெளிவுப் பெற வேண்டும்.நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் மகாசங்கத்தினர் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது என தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய பிக்கு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அரசாங்கத்திற்குள் இரு வேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது கொழும்பு ...
Read More »93-வது ஆஸ்கர் விருது விழா – 3 விருதுகளை அள்ளியது ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம்
க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் அதிகபட்சமாக மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே ...
Read More »ஆஸ்கர் விருது விழா 2021 – ஆதிக்கம் செலுத்திய 5 திரைப்படங்கள்
உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்படுகிறது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று ...
Read More »கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணமடைந்த நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இப்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து அவர் கொவிட் 19 காரணமாக இறந்திருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்ட அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பட்டு அதன் முடிவுகளின் படி, ...
Read More »பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை ?
தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரையில் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்படவில்லை . மாறாக அறிக்கையில் குறிப்பிடப்படாத பல அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார். குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ...
Read More »வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் ...
Read More »ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4 வாரங்கள் வரை சுரங்கப் பாதைத் தோண்டியதை நீதிமன்றத்திடம் ஈரானிய அகதி குறிப்பிட்டிருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை ...
Read More »கார்பன் உமிழ்வைக் குறைக்க நியூசிலாந்தின் வழியைப் பின்பற்றுங்கள்!
உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் உரையாற்றினர். இந்த உச்சி மாநாட்டில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். ...
Read More »