சுமார் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் நடமாடுவதை இந்த காலடி தடங்கள் சுற்றிக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மிகவும் பழமையான மனித கால் தடத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, நியூமெக்சிகோ மாகாணத்தில் புதை படிவ காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் ...
Read More »குமரன்
சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது!
சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது டிரான்ஸ் பசுபிக் ஒத்துழைப்பிற்கான முழுமையான முற்போக்கான உடன்படிக்கையில் இணைந்துகொள்வதற்கு சீனா முயன்றுவருகின்றது. எனினும் ஆசிய நாட்டிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக சீனா பார்லி மற்றும் வைன் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் வரையில் இந்த உடன்படிக்கையில் சீனா இணைந்துகொள்வதை எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன்தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுடன் தான் இணக்கப்பாட்டுடன் ...
Read More »சிறையில் இருக்க வேண்டியவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில்!
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொள்ளையடித்தவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதுன் தற்போது உண்மையை கூறுபவர்கள் அங்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) தெரிவித்துள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிரில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் கொள்ளை, மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டனர். எனினும் தற்போது ஈஸ்டர் தாக்குதல் பற்றி உண்மையை வெளியிடுவோர் அன்டிஜன் மோசடி தொடர்பான உண்மையை கூறுவோர். ...
Read More »சாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் திரையிசை வரலாற்றில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள் இவருக்கு பாடும்நிலா என்று பட்டம் கொடுத்து அழைத்தாலும் திரையுலகில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குப் பிறகு அதிகம் நேசிக்கப்பட்ட மூன்றெழுத்து எஸ்.பி.பி. என்ற மூன்றெழுத்தாகதான் இருக்கும். 1966ல் கோதண்டபாணி இசையில் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்.பி.பி. 19964ம் ஆண்டுகளில் மெல்லிசைக்குழு வைத்து நடத்தி வந்தார். இவரது இசைக்குழுவில்தான் இளையராஜா கிடார் வாசித்து வந்தார். ...
Read More »பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!
பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் ...
Read More »அகதிகளை தடுத்து வைக்க மீண்டும் ஒப்பந்தம்
ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தானது ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மீண்டும் ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் நவுருத்தீவினை கடல் கடந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலனை மையமாக பயன்படுத்த தொடங்கிய ஆஸ்திரேலியா, அத்தீவினை தொடர்ந்து தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் மையமாக பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நவுருவுடன் கையெழுத்திட்டுள்ளது. “சட்டவிரோதமாக படகில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது நவுருத்தீவுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் ...
Read More »இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்?
கொரோனா வைரஸின் பேகமான பரவல் அச்சம் இருந்து கொண்டிருக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குத் தாக்குதல் அச்சுறுத்தல், நாரேகஹம்பிட்டி வைத்தியசாலைக் கழிப்பறைக்குள் கைக்குண்டு மீட்பு, யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் மீட்பு, திருகோணமலை, மூதூரில் இரண்டு கிளைமோர்கள் மீட்பு என்றெல்லாம் செய்திகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன. நேரடியாகச் சொன்னால், கடந்த 13அம் திகதி முதல் சர்வதேச ரிதியில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வடிவத்திலும் எதிரொலிக்கின்றன ...
Read More »நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்!
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...
Read More »சமந்தாவுடன் விவாகரத்தா?
நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே ...
Read More »செப்டெம்பர் 11 தாக்குதல்; நினைவேந்தல் நிகழ்வில்…
அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலங்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வருடப் பூர்த்தியையொட்டி, அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார். 2001 செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, நியூயோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்கடனின் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவற்றை இலக்கு வைத்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரையொட்டி, ஐக்கிய நாடுகள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal