குமரன்

இத்தீவில் எந்த காவல்துறை கடமையாற்றப் போகிறார்கள்?

சீனாவின் கடன் காலனித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கின்றது  சிறிலங்கா அரசாங்கம் என தமி;ழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சீனாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம், தமிழர் தாயக பகுதிகளில் தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புக்கான தளங்களையோ உருவாக்க பின்னடிக்கிறது. பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் தமது முதலீட்டில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க தயாராக இருக்கின்றர், ஆனால் அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையின் சட்டதிட்டங்கள் அதற்கு தடைகளை ஏற்படுத்துகிறது. Port City விவகாரம் என்பது ...

Read More »

அதிகாரத்தை மத்தியில் குவிப்பதில் எதுவித அர்த்தமுமில்லை!

தமிழ்மக்களிற்கு தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என     நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பெரும்பாலான எதிர்கட்சி உறுப்பினர்களைப்போலன்றி நாம் இச்சட்டமூலத்தை வேறு விதமாகவே அணுகுகிறோம். எங்களது பார்வையில் ஒரு சிறியநாடாகவுள்ள இலங்கை சர்வதேசஅளவிலான பொருண்மியப் போட்டிகளை எதிர்கொள்வதானால் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவதுபற்றிச் சிந்திக்க வேண்டிள்ளது. குறிப்பாக கொரோணா பெருந்தொற்று காரணமாக உலகளவில் பொருண்மிய வீழ்ச்சி ...

Read More »

நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. சட்டமூலத்தின் முக்கிய சில சரத்துகளுக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரியும் வாக்கெடுப்பில் தோற்றனர். நாடாளுமன்றத்தில், நேற்றும், இன்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட ...

Read More »

இலங்கை நாளை இரவு முதல் 3 தினங்கள் முடங்குகிறது!

நாட்டிலுள்ள கொவிட் ; நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை ; இரவு முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தொடர்ந்து அன்றிரவு (25 ஆம் திகதி இரவு) 11 ...

Read More »

யாழில் அதிகரிக்கும் கொரோனா; பொதுமக்கள் அலட்சியம்!

யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த ...

Read More »

இலங்கைக்குள் ஒரு சீன அரசு

இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூல த்தை அவசர அ ...

Read More »

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் 3-வது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவும் தயாரித்து பயன்படுத்தி வருகிறது. ஒருவருக்கு இந்த தடுப்பூசி, 2 டோஸ்கள் போடவேண்டிய நிலையில், இதன் 3-வது டோஸ் மூலம் என்னவித மாற்றங்கள் நிகழும்? என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. இதில் ஆச்சரியமான முடிவுகள் கண்டறியப்பட்டு உள்ளன. குறிப்பாக 3-வது டோஸ் ேபாடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வலிமையாகி ...

Read More »

நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ...

Read More »

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் ஜெயிலில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் புழல் ஜெயலில் உள்ளார். அவரை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பேரறிவாளன் 30 நாட்களில் பரோலில் ஜெயிலில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மாறிக்கொண்டே இருக்கும் குடிவரவு விதிகள்?

“இப்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா பெற விண்ணப்பிப்பது சாதாரணமான காரியமல்ல. குடிவரவு விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு விண்ணப்பப் பணிகளுக்கே இடையிலேயே அந்த மாற்றம் நிகழ்கின்றது. ஒரு முறை விண்ணப்பிக்க தகுதியான நபர், அடுத்த முறை தகுதியற்றவராக இருக்கிறார்,” எனத் தெரிவித்திருக்கிறார் Melanie Macfarlane எனும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு  முகவர்.

Read More »