பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக்கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மையின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது. ஆயரின் சர்ச்சைத் ...
Read More »குமரன்
திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு
சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபத் உள்ளது. திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட் ...
Read More »சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி
சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டது என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் ...
Read More »புத்தாண்டு தினத்தில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி மறுப்பு
புத்தாண்டு தினத்தில் சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிடு வதற்கு அனுமதி வழங்கப்படாது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்க நாயக்க தெரிவித்தார்.
Read More »ஐம்பது பக்க ஆவணத்தினை பிரிட்டனின் தடைகள் தொடர்பான திணைக்களத்திடம் கையளித்தது சர்வதேச அமைப்பு
இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் ...
Read More »ஆஸ்திரேலியாவில் நிச்சயமற்ற நிலையில் ஈராக்கிய குடும்பம்
ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற மேல்முறையீடும் தோல்வியில் முடிந்துள்ளது. ஈராக்கிய அகதியான Fares Al Kilaby ஆஸ்திரேலியாவில் கடந்த 2013ம் ஆண்டு படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். தனது தாய்நிலத்தை விட்டு மிகவும் மோசமான வன்முறை நிகழ்ந்த காலத்தில் அதிலும் ஐ.எஸ். வளர்ந்து வந்த காலத்தில் ஈராக்கிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் Fares மற்றும் அவரது குடும்பம் தஞ்சக்கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டை நிராகரித்ததால், ...
Read More »பெரியாரியப் பாதையில் பெரும் வாழ்வு
சிந்தனையாளர் பெரியாரைத் திராவிட இயக்கத்துக்குள்ளேயே எப்படிச் சிறைப்படுத்திவிட முடியாதோ அப்படி அவர் வழியில் தொடரும் பெரியாரியச் சிந்தனையாளர்களையும் அரைடஜன் அமைப்புகளுக்குள் அடைத்துவிட முடியாது. அறிவுச் சிறகை விரித்து அகண்ட வெளியில் அவரவர்க்கு எட்டிய உயரத்தில் பலரும் பறந்து திரிந்திருக்கிறார்கள். பெரியாரின் சிந்தனைகளைத் துறைவாரியாகத் தொகுத்து வெளியிடுவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவரும் சமூகநீதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான வே.ஆனைமுத்துவும் (1926-2021) அத்தகைய வரையறைக்குள் அடங்காத ஆளுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அன்றைய திருச்சி மாவட்டத்தின் பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடியில் பிறந்தவர் ஆனைமுத்து. சிறுவயதில் இறை நம்பிக்கை ...
Read More »பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். அரசியல் யாப்பின் 10, 12, 13 மற்றும் 14 ஆம் சரத்துகளில் உள்ள உரிமைகளை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகள் மீறுகின்றமைக்கு எதிராகவே குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் நாட்டு பிரஜைகளின் பேச்சு சுதந்திரம், ...
Read More »முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற சிறிலங்கா காவல் துறை உத்தரவு
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி காவல் துறை இன்று (10.04.2021) விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெற்றி வீதியின் பெயரை அகற்றுமாறும் அல்லது குறித்த நபரின் சொந்தப் பெயரை வைக்குமாறும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றி வீதி என பெயிடப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுதொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு ; அமைவாக கிளிநொச்சி காவல் துறை இன்று சனிக்கிழமை ...
Read More »மியான்மரில் ராணுவம், எல்லையில் அகதிகள், இக்கட்டில் இந்தியா
மியான்மர், பிப்ரவரி 1 அதிகாலை. தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி (என்.எல்.டி) பதவியேற்கச் சில மணி நேரங்களே இருந்தன. அப்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. என்.எல்.டியின் தலைவர் ஆங் சான் சூச்சியும் கட்சியின் முன்னணியினரும் சிறை வைக்கப்பட்டார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள். ராணுவத்தின் கரங்கள் சொந்த நாட்டு மக்களின் குருதியில் நனைந்திருக்கின்றன. பல ஆண்டுகளாகவே மியான்மர் ராணுவத்தோடு இந்தியா அனுசரணையாக இருந்துவருகிறது. பிப்ரவரி மாதம்கூடத் தனது கவலையைப் பதிவுசெய்ததோடு நிறுத்திக்கொண்டது. ஆனால், மனிதநேய ஆர்வலர்கள் ...
Read More »