குமரன்

ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் இடிந்து தரை மட்டம்

அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர். காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமானது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது. அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் ...

Read More »

நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு ...

Read More »

பயண தடைக்கு பின்னர் இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா தரை இறங்கியது!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்களை சுமந்து கொண்டு முதல் விமானம் ஆஸ்திரேலியா போய்ச்சேர்ந்தது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனவழிப்பு சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுங்கள்!

இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை சிறீலங்கா அரசு கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில்; கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொவிட்-19 ...

Read More »

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை? ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது?

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை வேறு வழியின்றி சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் ஈழத் தமிழர்களையும் சீனாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்திய தேசம் இரட்டை வேடம் போட்டு வந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சீன நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

Read More »

பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் பிடிவாதம்

வாட்ஸ்அப் செயலியில் மேம்படுத்தப்பட்ட புது பிரைவசி பாலிசி விதிகளை ஏற்காதவர்களுக்கு புது கட்டுப்பாடு அமலாகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரைவசி பாலிசியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு பிறப்பித்த மே 15 காலக்கெடுவை நீக்கிவிட்டது. இதனால், புது அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்கள் மே 15 ஆம் தேதிக்கு பின் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம். எனினும், புது அப்டேட் இன்ஸ்டால் செய்யக் கோரி வாட்ஸ்அப் சார்பில் அடிக்கடி நோட்டிபிகேஷன் அனுப்பப்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். புது விதிகள் வாட்ஸ்அப் அதன் பயனர் விவரங்களை பேஸ்புக் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் திட்டமிட்டபடி மே 18 நடைபெறும்

வடக்கு – கிழக்கு கட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – “ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த நூற்றாண்டிலே இன அழிப்பு இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் உள்ளிட்ட கடைசி மாதங்களில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறி இருக்கின்றன. இன அழிப்புக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் நீதி ...

Read More »

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்!

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், சிறிலங்காவை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன்போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அவர், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்நிறுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

Read More »

நாடாளுமன்ற விவாதம் குறித்து ரணில் – மங்கள ஆலோசனை: வெளியானது தகவல்

துறைமுக நகர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பலரும் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இணையம் வழி ஊடாக இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடவானது, துறைமுக நகரை இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொடுக்க கூடியதொன்றாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்ற விவாதத்தை எதிர்கொள்ளுதல் போன்றவற்றுக்கு  ஆலோசணை வழங்கும் வகையிலேயே இடம்பெறவுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ...

Read More »

மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடம்

இந்தியா உறுதியாக இருங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக  உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ...

Read More »