வாட்ஸ்அப் செயலியில் மேம்படுத்தப்பட்ட புது பிரைவசி பாலிசி விதிகளை ஏற்காதவர்களுக்கு புது கட்டுப்பாடு அமலாகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரைவசி பாலிசியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு பிறப்பித்த மே 15 காலக்கெடுவை நீக்கிவிட்டது. இதனால், புது அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்கள் மே 15 ஆம் தேதிக்கு பின் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம்.
எனினும், புது அப்டேட் இன்ஸ்டால் செய்யக் கோரி வாட்ஸ்அப் சார்பில் அடிக்கடி நோட்டிபிகேஷன் அனுப்பப்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். புது விதிகள் வாட்ஸ்அப் அதன் பயனர் விவரங்களை பேஸ்புக் இயக்கும் வசதியை வழங்கும்.
புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்களுக்கு சில அம்சங்களை பயன்படுத்தும் வசதி படிப்படியாக நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்-ஐ இயக்க முடியாது. மேலும் வாட்ஸ்அப்பில் வரும் அழைப்புகளை ஏற்க முடியும்.
எனினும், நோட்டிபிகேஷன் அலெர்ட்களை க்ளிக் செய்த பின்பே குறுந்தகவல்களை படிக்க முடியும். சில வாரங்களுக்கு பின் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல்கள் நிறுத்தப்படும்.