தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சீமானை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ...
Read More »குமரன்
கொரோனாவைக் காட்டி கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் நிதி பெற முயற்சியாம்!
தமிழ்த தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமண கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் -19’ இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங் களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் தயாராகவே இருக்கின்றனர். இதற்கான அனுமதியை அரசு வழங்கினால் திட்டத்தை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நிதி ...
Read More »மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியில் இருந்து இன்று புதன்கிழமை காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் காத்தான்குடி சுகாதார ...
Read More »இசை ஜாம்பவான் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்
இன்று தனது 78-வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 1976-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வெளிவந்த ‘அன்னக்கிளி’ படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 44 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை இசையால் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. திரைஇசையில் பல மாயாஜாலங்களை நிகழ்த்திய இளையராஜாவுக்கு இன்று 78-வது பிறந்த நாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் ...
Read More »சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு
சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் ஆவார். தற்போது அவரது உடல்நிலை சீராக ...
Read More »இலங்கைத்தீவில் சீன சகாப்தம்?
சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல.ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது.அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து ...
Read More »160 இந்திய யூதர்கள் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பினெய் மெனாஷே இனத்தவரை, யூதர்களாக அங்கீகரிப்பதாக, இஸ்ரேலைச் சேர்ந்த யூதத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின், இந்த இன மக்கள், இஸ்ரேலுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இதுவரை 2500-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். இந்தநிலையில் ...
Read More »Hi சொல்லி ரசிகரை நல்வழிப்படுத்திய யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தனது ஒரே ஒரு பதிலால் ரசிகர் ஒருவரை நல்வழிப்படுத்தி இருக்கிறார். சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்று ...
Read More »ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்
குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் சஞ்ஜெய் ராஜரத்னம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். 48 ஆவது சட்டமாதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜெய் ராஜரத்னம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார் புதிய சட்டமாதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ல் ...
Read More »யாழில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்
கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் ...
Read More »