அவுஸ்திரேலியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் தாய் உயிரிழந்த நிலையில் தனது மகனுக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை மகன் தற்போது முதல்முறையாக படித்துள்ளார். மெல்போர்னை சேர்ந்தவர் எம்மா. இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பென்சர் என்ற மகன் பிறந்தான். எம்மா கர்ப்பமாக இருக்கும் போதே அவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தது, இந்நிலையில் ஸ்பென்சரை பெற்றெடுத்த பத்து மாதத்தில் எம்மா நோய் முற்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் தனது மகன் ஸ்பென்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எம்மா எழுதியிருந்தார். ஸ்பென்சர் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் கடிதத்தை ...
Read More »குமரன்
வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்!
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய ...
Read More »58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்!
பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு ...
Read More »என்னுடைய தலையீட்டால் கீத் உயிர் தப்பினார்! – சபாநாயகர் கரு ஜயசூரிய
தன்னுடைய தலையீட்டினால், கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நோயர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் அளிக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில், விரைவில் சபாநாயகரிடம் வாக்குமூலம் பெறப்படும் எனவும், இந்த கடத்தல் தொடர்பில் கரு ஜயசூரிய எவ்வாறு அறிந்துகொண்டார் என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு ...
Read More »இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுள் 280 பேரின் விபரங்கள் வெளியீடு!
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கான இலங்கையின் அலுவலகமானது 2009இல் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிநாட்களில் ...
Read More »அவுஸ்திரேலியே வீரரின் சாதனை!
அவுஸ்திரேலியே வீரர் ஒருவர் உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை குறைந்த நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார். ஸ்டிவ் பிலைன் (steve plain) என்ற மலையேறும் வீரர் இந்த சாதனை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை, அவர் 117 நாட்களில் அடைந்துள்ளார். போலந்து நாட்டு வீரர் 126 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததே இதுவரை சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை!
உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்லது பாதிப்புகளை, ஆத்மார்த்தமாக அணுக வேண்டிய தேவைப்பாடு, இங்கு நிறையவே உள்ளது. யுத்தம் நிறைவுக்கு வந்து, ஒன்பது ...
Read More »150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்!
அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன் 150-க்கும் மேற்பட்ட கதைகளை வேண்டாம் என்று நிராகரித்துள்ளாராம். கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறாராம். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அருவி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். படத்துக்கு, முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. அந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்து படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. விசாரித்தால் அவர் இந்த ஆறு மாதங்களில் சுமார் ...
Read More »ஈபிடிபி உறுப்பினருடன் சிரேஷ்ர ஊடகவியலாளர் வித்தியாதரன் கூட்டு!
ஈபிடிபி உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான சி. தவராசா மற்றும் சிரேஷ்ர ஊடகவியலாளரும், காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ந.வித்தியாதரன் ஆகியோரை இணைப்பாளர்களாகக் கொண்டு யாழில் ‘முன்னோக்கி நகர்வோம்” எனும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15) முற்பகல்-10 மணி முதல் யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் பின் வீதியில் நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் விதவைகளின் நிலைபேறான ...
Read More »