பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான, சிறிய மேசையுடன் கூடிய, ‘ஸ்கூல் பேக்’கை, கான்பூர், ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர், உருவாக்கி சாதனை படைத்துள்ளார். உ.பி., மாநிலம், கான்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்த மாணவர், ஈஷான் சதாசிவன், 27.இவர், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்ட, ஸ்கூல் பேக்கை உருவாக்கி உள்ளார். 680 கிராம் எடையுள்ள இந்த பேக்கின் விலை, 400 ரூபாய் மட்டுமே. இந்த பேக்கில், இலகு வகை டியூப்களால் ஆன, ...
Read More »குமரன்
நீண்ட காலம் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி!
ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கை தமிழ் குடும்பத்தை நீண்ட காலத் அங்கேயே தங்குவதற்கான அனுமதியை அந்தநாட்டு பெடரல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை நாடு கடத்தலை எதிர்த்து செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. அதற்கமைய இந்த குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எனினும், நிராகரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு பெடரல் நீதிமன்றத்தால் ...
Read More »தமிழ் அரசியல் தலைவர்களை ஒரே கூரையில் இணைய செய்த வடக்கு முதல்வர்!
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், அண்மைக்காலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சார்பான அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான அணி என்று இரண்டு துருவங்கள் உருவாகியிருந்த சூழ்நிலையில்,நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பங்கேற் றிருந்தனர். குறிப்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிர கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நாடாளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் ...
Read More »“ எனது கணவர் விடுதலைப்புலிகளின் உளவாளி என மிரட்டல் விடுக்கின்றனர்“!
ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். முகநூல் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண ...
Read More »போராளிகள் ஒன்றிணைய வேண்டும்!” – மேதா பட்கர்
நாட்டின் (இந்தியா) உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் வணிகமயமாகத்தான் இருக்கின்றன. அவை உண்மையான வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதில்லை – மேதா பட்கர் 63 வயதிலும் மக்கள் போராட்டங்களின் ஆதரவுக் குரலாக இந்தியா முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கிறார் மேதா பட்கர். குஜராத்தின் நர்மதா ஆற்றில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இந்தியா முழுவதும் நடைபெறும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், குடிசைகள் வெளியேற்றம் என விளிம்புநிலை மக்களின் குரலாகத் தொடர்ந்து களமாடி வருகிறார். ஸ்டெர்லைட், சென்னைக் குடிசைப் பகுதி வெளியேற்றம் போன்ற பிரச்னைகளுக்காகச் சமீபத்தில் ...
Read More »அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட நவுறு அகதி!
நவுறு அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். palliative care எனப்படும் நோய்த்தணிப்பு நிவாரணத்தைப் பெறுவதற்காக நவறு அகதி ஒருவருக்கு அவுஸ்திரேலியா வர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். பல தரப்புக்களிலிருந்தும் வந்த அழுத்தங்களை அடுத்தே நவுறு அகதியை அவுஸ்திரேலியா அழைத்துவர அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் கோரி வந்த ஆப்கான் ஹஸரா பின்னணி கொண்ட 63 வயதான ஆண் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இவர் சில மாதங்களே உயிர்வாழ்வார் என்று ...
Read More »வித்தியாசமான தரமான அற்புதமான பாரம்பர்யமான ஒரு பேய்ப்படம்..! #Hereditary
என்ன சொல்வது ? பல மாதங்களுக்குப் பிறகு புதிர்களுடன் கூடிய ஓர் அட்டகாசமான ஹாரர் திரைப்படம். எல்லாப் புதிர்களுக்கும், படத்துக்குள்ளேயே பதில் இருக்கிறது. ( டிரெய்லரில் வரும் காட்சிகள், படம் பற்றிய குறைந்த பட்ச பேஸிக் ஒன்லைன். இதைத் தாண்டி எந்த ஸ்பாய்லரும், அடுத்த நான்கு பத்திகளில் இருக்கப்போவதில்லை, என்பதால் தொடர்ந்து படிக்கலாம் ) அந்த வீட்டில் இருக்கும் வயதான பெண் (எல்லன் ) இறந்து போகிறார். எல்லன் தன் மகள் ஆனியின் வீட்டில் வசித்து வந்தார். எல்லனின் இறப்புக்குப் பின்னர், ஆனியின் வீட்டில் பல ...
Read More »டிரம்ப் – கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ...
Read More »தையலோடு தமிழையும் தேடும் படை! – ‘ழகரம்’ க்ரிஷ்
‘தினம்தோறும்’ படத்தின் மூலம் யதார்த்த இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நாகராஜ். அந்தப் படம் தந்த அடையாளத்தால் ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார். கௌதம் வாசுதேவ் மேனனின் அணியில் முக்கிய அங்கம் வகித்துவரும் நாகராஜின் மகன் க்ரிஷ், ‘ழகரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் நந்தா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிகட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த க்ரிஷிடம் உரையாடியதிலிருந்து… உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம்… சொந்த ஊர் நாகர்கோவில். அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ் ...
Read More »பிரிவோமாக இருந்தால் எமது மக்களை நாமேஅழித்துவிடுவோம்! -சம்பந்தன்
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டார். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய நீதியரசர் பேசுகிறார் என்ற தலைப்பிலான புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், ...
Read More »