நவுறு அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். palliative care எனப்படும் நோய்த்தணிப்பு நிவாரணத்தைப் பெறுவதற்காக நவறு அகதி ஒருவருக்கு அவுஸ்திரேலியா வர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
பல தரப்புக்களிலிருந்தும் வந்த அழுத்தங்களை அடுத்தே நவுறு அகதியை அவுஸ்திரேலியா அழைத்துவர அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தஞ்சம் கோரி வந்த ஆப்கான் ஹஸரா பின்னணி கொண்ட 63 வயதான ஆண் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
மேலும் இவர் சில மாதங்களே உயிர்வாழ்வார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக குறித்த நபரை அவுஸ்திரேலியா அழைத்துவந்து palliative care வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அம்முயற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.