நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றும் டாக்டர் ராஜிவ் ஜோஷி என்பவருக்கு ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் என்ற மதிப்பு மிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டாக்டர் ஜோஷியின் மின்னணு தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு உகந்த செயல்பாட்டுக்காகவும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்காகவும் ஜோஷிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 250 காப்புரிமைக்குட்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் ஜோஷி. இதனால் நியூயார்க்கின் மதிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டக் கூட்டமைப்பு இவருக்கு மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வழங்கி கவுரவித்தது. டாக்டர் ...
Read More »குமரன்
அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் – வித்யா பாலன்
தற்காலிகமானது தான்… அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். இதனை தியேட்டர் அதிபர்கள் எதிர்க்கின்றனர். இதுகுறித்து வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கொரோனா ஊரடங்கால் படங்களை தியேட்டர்களில் திரையிட முடியாமல் 2 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இதனால் புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட சிலர் முன் வந்துள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் சினிமா படங்களை தியேட்டர்களில் வெளியிட ...
Read More »மனிதனாக இருப்பது தான் பாதுகாப்பின்மை – ராஷ்மிகா
பாதுகாப்பின்மை என்பதன் பொருள் ‘மனிதனாக இருப்பது’ என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறையில் தான் சந்தித்த பாதுகாப்பற்ற நிலை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பாதுகாப்பின்மை இந்த வார்த்தையை கூகுளில் தேடினால் ஒரு விஷயம் குறித்து நிச்சயமற்ற தன்மையில் அல்லது அதிக ...
Read More »சூர்யாவிற்கு காயம் ? – குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டு குணமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. சுதா கொங்காரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரைப்போற்று படம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ரிலீசாகவிருக்கிறது. இதற்கிடையே ஒரு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் #GetWellSoonSuriyaAnna என்ற ...
Read More »நிலநடுக்கத்திலும் அசராமல் நேர்காணலை முடித்த நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்தில் நிலநடுக்கம் குறுக்கிட்டபோதிலும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அசராமல் தனது தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இன்று பாராளுமன்றத்தில் இருந்தபடி, தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்று பேசினார். அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அவருக்கு பின்னால் இருந்த திரை மற்றும் பொருட்கள் அதிர்ந்தன. எனினும் ஜெசிந்தா பதற்றப்படாமல் தொடர்ந்து தனது நேர்காணலை தொடர்ந்தார். தனக்கு பின்னால் இருக்கும் பொருட்கள் அசைவதைப் பார்த்தும் அச்சம் இன்றி, முகத்தில் புன்னகையுடன் பேசிய அவர், ‘இங்கு நாம் லேசான நிலநடுக்கத்தை ...
Read More »ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் 1,905 பேருக்கு பயண விலக்கு
கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டினால், கடந்த மூன்று மாத காலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா விசா பெற்றவர்கள் வெளிநாடுகளில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த காலத்தில் 1,905 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 253 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய எல்லைப்படையின் கணக்குப்படி, இதில் 801 பேருக்கு கருணையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த அடிப்படையில் விண்ணப்பித்த 195 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஆஸ்திரேலிய செனட் விசாரணையில் பேசியிருந்த ...
Read More »யாழில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பலை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதங்களுடன் கைது
வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று ( 25) திங்கட்கிழமை மாலை மூவரும் கைது செய்யப்பட்டடதாக பொலிஸார் கூறினர். சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுன்னாகம் காவல் துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
Read More »வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த பதவியில் உள்ள திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார் என்றும், தேர்தலின் பின்னர் அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அண்மையில் திருமதி சாள்ஸ் தனக்கு மூன்று மாத ஓய்வு வேண்டும் என்று கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றம்
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்’ பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் ...
Read More »ஒரு நிகழ்வு-இரு அளவுகோல்கள்
இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்தர்கள் அங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடம் அரக்கத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்` ;—முள்ளிவாய்க்கால் நினைவு உரை 2020 இல்—ஹோஸே மனுவேல் ராமோஸ் ஹோர்டா—1996 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றவர். கால்பந்து உட்பட கோல்கள் அடித்து விளையாடும் ஆட்டங்கள் தொடர்பில் ஒரு சொலவடை உண்டு ;நமக்கு ஒத்துவரவில்லை என்றால் கோல் போஸ்ட்டுகளை தள்ளிவை என்பதாகும். அதாவது தமது தேவைக்கேற்ற வகையில் அளவுகோலை மாற்றிக் கொள்வது. அடுத்தவர்கள் எதையாவது முறையாகச் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்கள் ...
Read More »