குமரன்

யாழ். யுவதிக்கு உதவுமாறு பெற்றோர் உருக்கம்

யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சாஜினி என்ற 19 வயது யுவதிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அவருக்கு மிக விரைவாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது ஒரு சிறுநீரகத்தை தானம் வழங்க தாய் முன்வந்துள்ள போதிலும் சத்திரசிகிச்சை மற்றும் வைத்திய பாராமரிப்புச் செலவீனங்களை எதிர்கொள்ள முடியாது பெற்றோர் தவிர்க்கின்றனர். இதனால், தமது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கணக்கு இலக்கம் – 101075065585 (N.S.B) மேலதிக விவரங்களுக்கு தந்தை (சுரேஷ்) – 0778445767

Read More »

சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின், நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி-நோயாளர் மரணம்”என்பதை போன்றது என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், வரவு- செலவு திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள்,அறிவிக்கப்பட்டுள்ள செலவினங்கள்  தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த ...

Read More »

முன்னாள் போராளிகள் சாட்சியமளித்தனர்!

மூன்று தசாப்தகாலப் போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் எவை? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகாலத்தை மறந்துவிட்டு முன்நோக்கிப் பயணித்தல் என்பது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. போரில் பங்கேற்ற இரண்டு தரப்புக்களில் தமிழ்த்தரப்பு தற்போது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் ‘வெற்றியீட்டிய தரப்பாக’ இருந்துகொண்டு இப்பிரச்சினையை அணுகுகின்றது என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் கண்ணீர்மல்க சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைத் தமிழ்மக்களும் அனுபவிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் ...

Read More »

எல்லா முஸ்லிம் தலைமைகளுடனும் தமிழ்த் தரப்பு உரையாடுவது அவசியம்

தமிழ்க் கட்சிகளும் அரசியல் அணிகளும் முஸ்லிம் கட்சி ஒன்றும் இணைந்து, சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பு, சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அரங்கில் சில அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. அடிப்படையிலேயே இதுவொரு நல்ல நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.  இரண்டு சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அணிகளும் ஒருமேசையில் அமர்வது, நல்லதொரு முன்மாதிரி என்பதை மறுக்க முடியாது. ஆனால், தமிழ்த் தரப்பும் முஸ்லிம்களும் இதை இரு வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட,  தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளிடையே ...

Read More »

திறக்கப்படும் எல்லைகள்: கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆஸ்திரேலியா

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கம்போடிய நாட்டு எல்லைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கம்போடியாவும் ஆஸ்திரேலிய தூதரகமும் இணைந்து நவம்பர் 2 முதல் 25 வரை கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குகிறது. “கொரோனா தடுப்பூசிகள் குறித்து புரிந்து கொள்ள, தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் மற்றும் வாய்ப்புகள், மனித கடத்தல், முகங்களை ஒப்பிட்டு பார்க்கும் முறைகள் குறித்து குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்,” என கம்போடிய குடிவரவுத்துறை பேச்சாளர் General Keo Vanntha தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக காவல் துறை பிரிவு நிறுவப்படும்

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக சமூக காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள் ளன என்று வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார். இது குறித்து ஆளுநரின் பத்திரிகை செயலாளர் பத்திரிகை களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு, வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பிரஜா காவல்துறையினர் என்ற பெயரில் செயற்படவுள்ள இந்தத் திட் டத்தில் வேலையற்ற இளைஞர்கள் திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்தத் திட்டம் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வட ...

Read More »

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு

பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல. நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்ற பெண் தலைவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ ...

Read More »

பா.ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு

மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து ...

Read More »

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பாணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே கடந்த மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அருட்தந்தை சிறில் காமினிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், அவருக்குப் பதிலாக அன்றைய தினம் மூன்று அருட்தந்தை யர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினர். ...

Read More »

ஜெய் பீம் சொல்வதென்ன?

பழங்குடி இருளர் மக்களின் அவலத்தைச் சொன்ன ‘ஜெய் பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இக்கதைபோல் பல நூறு விளிம்புநிலைக் குழுக்கள் சமூகச் சட்டங்களாலும், அரசின் அலட்சியத்தாலும் அன்றாடம் பந்தாடப்படுவது நிதர்சனம். இம்மக்களின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் ஒலித்திட முடியாத நிலையிலே இவர்களின் மக்கள்தொகை உள்ளது. தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஆங்கிலோ-இந்தியர்களுக்கு வழங்கப்படும் சட்டமன்ற நியமனப் பிரதிநிதித்துவம்போல் இந்தக் குழுக்களுக்கும் கொடுத்திட சட்ட வழிவகை செய்திட வேண்டிய காலக் கட்டாயத்தை ‘ஜெய் பீம்’ திரைப்படம் வலியுறுத்துவதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பல்லாண்டு காலமாக எஸ்.சி./ ...

Read More »